கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார். முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.
கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த அரக்கன் கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (33). கட்டிட கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகாத்தாள் (27). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். ரங்கசாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் ஊரில் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று முருகாத்தாள் அம்மாவும், அவரது தம்பியும் முருகாத்தாள் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது அரங்கசாமி மது அருந்து வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால் முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.

பின்னர் ஒரு குடம் தண்ணீரை எடுத்து ஒரு ரங்கசாமி மீது ஊற்றினார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி தான் எங்கேயாவது போய் விடுகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் முருகாத்தாள் அவரது தாய் மற்றும் தம்பி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.

வீட்டில் ரங்கசாமி இருந்துள்ளார். பின்னர் முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள் தாழ்பால் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது ரங்கசாமி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் . அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ரங்கசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com