search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Visalakshi Visveswara Swamy Temple"

    • விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 27ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது.
    • இன்று மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 27ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 27-ந் தேதி விநாயகர் பூஜையும், 28-ந் தேதி சுவாமி பூத சிம்ம வாகனத்திலும், 29-ந் தேதி நந்தி காமதேனு வாகன த்திலும், 30-ந் தேதி சேஷ வாகனத்திலும், 31-ந் தேதி ரிஷப வாகனத்திலும் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று (1-ந் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று காலை சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இன்று மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தொடர்ந்து தேர் பெருமாள் கோவில் வீதி, கடைவீதி வழியாக வந்து நிலை சேருகிறது.

    நாளை பாரிவேட்டை, குதிரை கிளி வாகன காட்சியும், 4-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும், 5-ந் தேதி புஷ்ப விமானத்தில் சாமி உலா வருதலும், 6-ந்தேதி மஞ்சள் நீர் உற்சவ விழாவும் நடக்கிறது.

    ×