என் மலர்
ஈரோடு
- அந்தியூர் பஸ் நிலையம் அருகே செல்லீஸ்வரர் கோவில் உள்ளது.
- கோபுரத்திற்கு வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பித்து பூஜைகள் செய்யப்பட உள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பஸ் நிலையம் அருகே செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக செல்லீஸ்வரரும், தட்சிணா மூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகர், காலபைரவர் பிரம்மா, சண்டிகேஸ்வரர் துர்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வ ங்கள் உள்ளன. மேலும் முன் பிரகாரத்தில் நந்தி சிலையும் மிகப்பெரியதாக உள்ளது.
பிரதோஷ நாட்களில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து பிரதோஷ வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
இந்த நிலையில் நந்தி முன் உள்ள பிரகாரம் கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் ஆகியுள்ளதாலும், கோவிலில் சுற்றுச்சுவர் ஆங்காங்கே விரிசலோடி கீழே சாய்ந்து, தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது.
அதனை புணரமைக்கும் வகையில் பாலாலயம் என்னும் மூலவர் இருக்கின்ற சக்தியை வெளி கொண்டு வந்து செல்லீஸ்வரர் வெளியில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இதன் பின்பு பக்தர்களுக்கு செல்லீஸ்வரர் கோவிலின் வெளிப்பிர காரத்தில் அருள்பாலித்து வருவார். இந்த பணியில் கோபுரத்திற்கு (விமானம்) வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பித்து பூஜைகள் செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், அறநிலை துறை ஆய்வாளர் மாணிக்கம், கோவில் பணியாளர்கள் செந்தில்குமார், தணிகாசலம், பிருந்தா, சரவணன், ராஜமாணிக்கம், ரங்கநாதன், லோகு, குருக்கள் செந்தில், ராஜா, வாசு மற்றும் சிவ பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- பவானி போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
- இப்பேரணி பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று கூடுதுறை அடைந்தது.
பவானி:
பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு பவானி போலீசார் ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
பவானி புதிய பஸ் நிலையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணி பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று கூடுதுறை அடைந்தது.
இந்த பேரணியில் பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, போலீ சார் மற்றும் பவானி, மயிலம்பா டி, சித்தோடு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் என 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகள் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தியும், எமதர்மராஜா, மது பாட்டில், சிகரெட் போன்ற வேடம் அணிந்தும் பொதுமக்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- 2 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (45). இவர் ஒரு மில்லில் வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாதே ஸ்வரன் தனது மனைவி யுடன் கோபிசெட்டி பாளை யத்திற்கு ஒரு விசேஷத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்க ப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போத பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகையும் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மாதேஸ்வ ரன் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
- பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- 1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.88 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 469 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படை க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்பி.எப். உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சார்பில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியா ளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தை தோ ல்வியில் முடிவடைந்தது. தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு செல்லும் வகையில் ஒவ்வொரு நாளும் தூய்மை பணியாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலக ங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர். நேற்று காளை மாட்டு சிலை பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக என்ன போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து இன்று ஈரோடு மாவட்டம் சி.ஐ.டி.யு தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. சின்னசாமி, சி.ஐ.டி.யு. சுப்பிரமணியம், எல்.பி.எப் கோபால் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். முன்னதாக 7-வது நாளாக குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மலை போல் குப்பை தேங்கி உள்ளது.
மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
- போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அவர்களிடம் இருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் வெளிமாநில வெள்ளை தாளில் எண் எழுதிய துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இதை வாங்கினால் பரிசுகள் விழும் என 2 பேர் கூறியுள்ளனர்.
இது குறித்து கண்ணன் பவானி போலீசாரிடம் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (52) மற்றும் பவானி பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (32) ஆகியோர் என்பதும்,
வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 3 விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
- அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- மின்மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின்மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இங்கு மின்மயானம் கட்டினால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் என்று கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த திட்டம் கைவிடவில்லையென்றால் பல்வேறு போரட்டங்கள் நடத்தபடும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
- சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தனர்.
- கண்காணிப்பு கேமிராக்கள் வைத்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் அவ்வப்போது ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்று வருவதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வெள்ளித்திருப்பூர் குரும்பனூர்காடு ஈசாக்கு தோட்டப்பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, சகுந்தலா தம்பதியர். இவர்கள் சென்னம்பட்டி வனச்சரக்கத்தை ஒட்டியுள்ள பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே சத்தம் கேட்டதால் தம்பதியினர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டில் முன்புறத்தில் கட்டியிருந்த 2 வெள்ளாடுகள் காணவில்லை. பதறி அடித்து தேடிய போது காட்டிற்குள் வெள்ளாடுகள் ஆங்காங்கே மர்ம விலங்கு கடித்து உயிரிழந்து கிடந்தது.
இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு வந்து வனத்துறையினர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆடுகளை கடித்து குதறிய விலங்கின் கால் தடங்களை பார்க்கும் போது சிறுத்தையின் கால் தடம் போல் இருக்கிறது என்றும், ஆய்வுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அதன் பின் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் வைத்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- லாரியில் இருந்த கரும்புகள் குவியலாக சரிந்து சாலையில் கொட்டியது.
- இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல்-அத்தாணி ரோட்டில் தினமும் ஆயிர க்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் இருந்து பவானி செல்லும் சாலை, அத்தாணி வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை, கவுந்தப்பாடி செல்லும் சாலை மற்றும் அந்தியூர் செல்லும் சாலை என 4 வழி சாலைகள் இந்த பகுதியில் உள்ளன.
ஆப்பக்கூடல் நால்ரோடு அருகே தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருவ தால் தினமும் லாரிகளில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆப்பக்கூடல்- பவானி ரோட்டில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது.
அந்த லாரி ஆப்பக்கூடல் நால்ரோடு வந்து கவுந்தப்பாடி சாலை யில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்த கரும்புகள் குவியலாக சரிந்து சாலையில் கொட்டியது.
இதனால் நால்ரோடு வழியாக வந்து செல்லும் பள்ளி வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு உட னடியாக போலீசார் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரியின் சார்பிலோ கரும்பு குவியலை அகற்ற யாரும் முன்வரவில்லை.
நீண்ட நேரம் கழித்து ஆலையில் இருந்து ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு ரோட்டில் கொட்டி கிடந்த கரும்பு குவியலை சாலையில் இருந்து ஓரமாக ஒதுக்கி விட்டனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து உடனடி யாக கரும்புகளை அப்புற ப்படுத்தவில்லை.
இதனால் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- வீட்டில் தீப்பிடித்து சங்கமேஸ்வரன் உடல் கருகினார்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகேஉள்ஓடத்துறை நரிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (82). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. இவரது மனைவி சரஸ்வதி (66).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சங்கமேஸ்வரன் ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். மற்றவர்கள் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது ஓட்டு வீட்டில் தீப்பிடித்து சங்கமேஸ்வரன் உடல் கருகினார். இதுப்பற்றி தெரியவந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.
அப்போது வீட்டில் உடல் கருகி இறந்த நிலையில் சங்கமேஸ்வரன் மீட்கப்பட்டார்.
- கோவில் திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி:
பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் ஸ்ரீ பண்டார அப்பிச்சி, பகவதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கோவில் நிர்வா கத்தினர் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து கடந்த 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். பின்னர் நான்கு கால பூஜைகள் கோவில் வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கோவில் கோபுர கலசத்திற்கு யாக சாலை பூஜையில் இருந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., பவானி அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் பாட்டாளி தினேஷ்குமார் நாயகர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும்
பவானி, காடையாம்பட்டி, சேர்வராயன் பாளையம், பெரியமோள பாளையம் சின்னமோள பாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பண்டார அப்பச்சி, மலையாள பகவதி அம்மன் மற்றும் பல்வேறு வகையான முனிஸ்வர சுவாமிகள் என கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சாமிகளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
- குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட கடத்தூர் ஊராட்சி பள்ளிக்கூட பிரிவு பகுதி யில் 2 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு பொது மக்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் சாக்கடை வசதி இல்லை என கூறப்படு கிறது. இங்கு சாக்கடை வசதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் பல முறை பொதுமக்கள் மனு கொடு த்தனர். ஆனால் சாக்கடை வசதி செய்து தரப்பட வில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் சாக்கடை வசதி செய்து தர வலியுறுத்தி பள்ளிக்கூட பிரிவு பகுதி யில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் கிடை த்ததும் கடத்தூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளி த்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இன்று காலை பர பரப்பான நிலை நிலவியது.






