என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024-ல் மோடி ஆட்சி"

    • கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் சம நீதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
    • உலக அரங்கில் இந்தியா வின் மரியாதை பெருமளவு உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஈரோடு அடுத்த சோலார் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை தாங்கினார். சரஸ்வதி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் முருகா னந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அண்ணா மலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் சம நீதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் 16-வது பெரிய நாடாக இருந்த இந்தியா 5-வது இடத்திற்கு வந்துள்ளது.

    2024-ம் தேர்தலில் 400 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெறும். தமிழகத்தில் 39 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்பார்.தமிழ கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பெறுப்பேற்பார்கள்.

    உலக அரங்கில் இந்தியா வின் மரியாதை பெருமளவு உயர்ந்துள்ளது.

    இந்திய பிரதமரை விலைக்கு வாங்க முடியாது என அமெரிக்காவிற்கு புரிந்து விட்டது. அதனால், சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளனர்.

    பா.ஜ.க. வின் முதல் 5 ஆண்டுகளில் நாட்டை சமநிலைப்படுத்தும் பணியில் மோடி ஈடுபட்டார். மின்சாரம், கழிப்பறை, சமையல் எரிவாயு, பெண்களுக்கு எரிவாயு என அனைத்தும் மக்களுக்கு கிடைத்தது.

    இரண்டாவது 5 ஆண்டு களில் காஷ்மீர் பிரச்சி னைக்கு தீர்வு கண்டார். தற்போது பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் நேரம் வந்ததால் பிரதமர் அதனை கையில் எடுத்து விட்டார்.

    பொதுசிவில் சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் முதல்வர் ஸ்டா லின் பேசுகிறார். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத்கார் பேசியதன் தமிழாக்கத்தை ஒரு லட்சம் பிரதி எடுத்து ஸ்டாலினுக்கு அனுப்பவுள்ளோம்.

    பொதுசிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கு உண்மையான அங்கீகா ரத்தைக் கொடுக்கும்.

    முதல்வர் தனது கோபத்தை தீர்க்க பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்யத் தொடங்கியுள்ளார். பா.ஜ.க. தொண்டர்கள் இதைக் கண்டு அஞ்சப்போவ தில்லை. கட்சி வளர்ச்சிக்கே கைது நடவடிக்கைகள் உதவுகிறது. எத்தனை கைது நடவடிக்கைகள் வந்தாலும், 2024-ல் மோடி ஆட்சி வரு வதை தடுக்க முடியாது.

    புதிய பாராளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தை வெளி ப்படுத்த செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு முதலில் தேவாரம் தான் ஒலித்தது. இதிலும் மத அரசியல் செய்ய பார்த்தார்கள். இனிமேல் ஜாதி, மத அரசியல் எடுபடாது.

    ஈரோடு மாவட்டத்துக்கு என தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற ப்படவில்லை. திமுக ஆட்சியைப் பொறுத்தவரை 10-க்கு பூஜ்யம் மதிப்பெண் தான் கொடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.


    ×