search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the college bus to"

    • நிர்மல்குமார் மது போதையில் இருந்ததால் அவருடைய சகோதரர் நிதிஷ் பஸ்சை ஓட்டி வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நிர்மல்குமாரை கைது செய்தனர்

    பு.புளியம்பட்டி

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சுல்தான் ரோட்டை சேர்ந்த வர் நிர்மல் குமார். இவர் தனியார் கல்லூரியின் பஸ் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    கல்லூரி விடுமுறை என்பதால் அந்த கல்லூரி பஸ்சை நிர்மல்குமார் மற்றும் இவரது சகோதரர் நிதிஷ் ஆகிய இருவரும் எடுத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிர்மல்குமார் மது போதையில் இருந்ததால் அவருடைய சகோதரர் நிதிஷ் பஸ்சை ஓட்டி வந்தார்.

    ெதாடர்ந்து புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாலம் அருகே கல்லூரி பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக பஸ் ரோட்டை விட்டு கீழே இறங்கி பள்ளத்துக்குள் இழுத்துச் சென்று சிறிது தூரம் சென்று நின்றது.

    மேலும் கல்லூரி பஸ்சில் யாரும் இல்லாததால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதில் கல்லூரி பஸ்சின் முன்பகுதி சேதம் அடை ந்தது. இதையடுத்து அவர்கள் பஸ்சை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் நிர்மல் குமார் தனது அம்மாவுடன் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து நிர்மல்குமார் அவருடைய தாய் மற்றும் தந்தை இரு வரையும் தகாத வார்த்தை பேசி தாக்கியதாக கூறப்படு கிறது. மேலும் அவர் தாய்-தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் பு.புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நிர்மல்குமாரை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×