என் மலர்
ஈரோடு
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது
- வாய்க்காலின் பல இடங்களில் புதர் மண்டியுள்ள புல், பூண்டு, மரங்கள் என அனை த்தையும் அகற்றி தூர்வார வேண்டும்
அம்மாபேட்டை
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொ டர்ந்து மேட்டூர் வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். மேலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் வரத்துக்கு ஏற்ப வாய்க்காலில் தண்ணீர் திறப்பது சிறிது கால தாமதமும் ஆகலாம்.
கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது அந்தந்த காலகட்டங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தண்ணீரை திறப்பதுண்டு. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேறும் நிலையில் 120 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 91 அடியாக உள்ளது.
வாய்க்காலில் தண்ணீர் திறக்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் அதற்கு முன்பு வாய்க்காலின் பல இடங்களில் புதர் மண்டியுள்ள புல், பூண்டு, மரங்கள் என அனை த்தையும் அகற்றி தூர்வார வேண்டும்.
அப்போது தான் பாசன த்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் கடை மடை வரை தங்கு தடை யின்றி செல்லு ம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கா ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
- கல்குவாரி கிரசர் மணல் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- தமிழகம் முழுவதும் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது
பெருந்துறை,
தமிழ்நாடு கல்குவாரி கிரசர் மணல் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2016-ம் ஆண்டு நடை முறையில் உள்ள சிறு கனிம விதிகளை பெரும் கனிம விதிகளுடன் சேர்த்தது. கல் குவாரியில் அனைத்து அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்பு அனுமதி வழங்கப்பட்ட குவாரிக்கு தனிநபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் குவாரியை இயங்க விடாமல் அதிகாரிகள் அனுமதி மறுப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் தொழிலை நடத்த விடாமல் செய்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது.
தமிழக அரசும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் முழு வதும் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கல் குவாரி கள் மற்றும் கிரசர் மணல் குவாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளை பகுதியில் கிரஷர் லாரி உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டுமான பணிகள் சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- 500க்கும் மேற்பட்டோர் நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின் மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இங்கு மின் மயானம் கட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
மேலும் இந்த திட்டம் இந்த பகுதியில் கைவிடப்பட வில்லை என்றால் மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
+2
- பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
- குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழகத்தில் 2-வது பெரிய மண் அணையாகும். பவானி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையில் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலை பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பொழிவு இல்லாததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும். தற்போது 32.44 அடியாக நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதே போல் 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும், 33.46 அடியாக உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் தற்போது 22.11 அடியாகவும் குறைந்து காணப்பட்டது.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர்.
- கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
ஈரோடு:
பா.ஜனதா கட்சி 9 ஆண்டுகள் ஆட்சி நிறைவு செய்ததையடுத்து சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். இந்த சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து கூறி பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி ஈரோடு அடுத்த சோலார் புதிய பஸ் நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை தாங்குகிறார். சரஸ்வதி எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பேசுகின்றனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக சோலாரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் வாகனம் நிறுத்துவதற்கு தனி இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கழிப்பறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர்.
- வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஈத்கா தொழுகை மைதானத்தில் முஸ்லீம்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
- ஈகை திருநாளை கொண்டாடும் வகையில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.
ஈரோடு:
பக்ரீத் பண்டிகையை யொட்டி ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் இன்று காலை ஏராளமான முஸ்லீம்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பள்ளிவாசல், ரெயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பா ளையம் பள்ளிவாசல், ஓடைப்பள்ளம், கருங்கல்பா ளையம், எல்லப்பாளையம், கொக்கராயன்பேட்டை, கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், வெண்டிபாளையம், நஞ்சப்பாநகர், பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார்தோ ட்டம்,
வி.வி.சி.ஆர்., திண்டல், ஆர்.என்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. பெரியார் நகர் பகுதியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.
இதே போல கோபி, சத்தி, பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி உள்பட மாவட்டம் முழு வதும் 150-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்ற தோடு, ஈகை திருநாளை கொண்டாடும் வகையில், ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.
இதேபோல் அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்து ள்ள மஜீதேனூர் பள்ளி வாசலில்இன்று காலை 7.30 மணி அளவில் அந்தியூர், புதுப்பாளையம், தவிட்டு ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமி யர்கள் சிறப்பு தொழுகைகள் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- புல்லில் மறைந்திருந்த பாம்பு ஒன்று சென்னியம்மாளை கடித்து விட்டது.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கம்பூளியாம்பட்டி பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சென்னியம்மாள் (58). தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.
சென்னியம்மாள் கால்நடைகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு கால்நடைகளுக்கு புல் எடுப்பதற்காக அருகில் உள்ள காலி இடத்திற்கு சென்று புல்லை எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது புல்லில் மறைந்திருந்த பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக சென்னியம்மாளை கடித்து விட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல்வரின் சிறந்த செயல்பாடு விருது வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பத்துடன், கூடுதல் விபரம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஈரோடு:
தமிழக அரசு துறைகளில் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணி செய்த அலுவலர், நிறுவனங்கள், அமைப்புகளுக்கு முதல்வரின் சிறந்த செயல்பாடு விருது வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பதிவு செய்ய வேண்டும். தேர்வு குழு கூட்டம் மூலம் பரிசீலனை செய்து இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ளது. விண்ணப்பத்துடன், கூடுதல் விபரம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வருகின்ற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6-வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் பெறலாம்.
இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- மகேஸ்வரி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
- அவரிடம் இருந்த கஞ்சாவை பவானி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பவானி:
பவானியில் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு வரப்ப டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவத்தன்று பவானி போலீசார் புதிய பஸ் நிலையம் அருகில் சந்தே கத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டி ருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் பவானி காவேரி வீதி, கந்தன் பட்டறை பின்புறம் பகுதியில் வசிக்கும் விஜயன் என்கிற விஜயகுமார் மனைவி மகேஸ்வரி (26) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்யும் வகையில் 1½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சா லையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பவானி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.
- கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காணப்பட்டது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் விடுமுறை தினங்களில் அதிகளவில் வருகை தந்து குளித்து மகிழ்ந்து சென்று வருகிறார்கள்.
ஏப்ரல், ேம மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பேர் தினமும் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக கொடிவேரி தடுப்பணை பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வ ப்போது சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டுமே கூட்டம் ஓரளவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை விடு முறையையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் கொடி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அருவி யில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காண ப்பட்டது. சுற்றுலா பயணி கள் கொடிவேரி அணை பகுதியில் விற்பனையாகும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டனர்.
- அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் உள்ள கொளத்துப்பாளையம் பகுதியில் அப்பத்தாள் கோயில் அருகே டெக்ஸ்டைல் கடை உள்ளது.
இங்கு கோபிநாத் என்பவர் அவருடைய நண்பரின் மோட்டார் சைக்கிளை கடையின் உள்பகுதியில் நிறுத்திவிட்டு உள்ளே இருந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் பூட்டப்படாமல் சாவியுடன் நின்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் அங்கு வந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.
பின்னர் அந்த டெக்ஸ்டைல் கடையில் இருந்த ஊழியர்கள் பின் தொடர்ந்து தேடிய போது பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில் மோட்டார் சைக்கிளுடன் அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டை மாற்றியது தெரியவந்தது. பின்னர் அவரை சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவரது பெயர் சந்தோஷ்குமார் (21) என்பதும், திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போது பெருந்துறை அடுத்த பாலக்கரையில் உள்ள உறவினர் வீட்டின் அருகே வீடு வாடகைக்கு எடுத்து கூலி வேலை செய்து வருகிறார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
- ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.
- மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.
பசுமையை போற்றும் வகையில் பசுமை உலக சுற்றுப்புற சூழல் குறித்தும், மழை வளம் வேண்டியும் , புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி கவிதை, கட்டுரை, பாடல்கள் மூலம் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் ஓவிய போட்டியில் பங்கேற்று மரங்கள் குறித்து வரைந்தனர்.
எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பசுமை தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை தலைமை யாசிரியர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






