search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode market"

    • இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது.
    • ஈரோடு மீன் மார்க்கெட்டு க்கு இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டி னம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது.

    இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடை ந்ததால் கடந்த வாரத்தில் இருந்து மீன்கள் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இன்று மீன் மார்க்கெட்டுக்கு மேலும் மீன்கள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு மீன் மார்க்கெட்டு க்கு இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டி னம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது . மீன்கள் வரத்து அதிகரிப்பு எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக வஞ்சரம் ஒரு கிலோ ரூ.1200 வரை விற்கப்பட்டது. இன்று விலை குறைந்து ஒரு கிலோ வஞ்சரம் ரூ.900-க்கு விற்க ப்படுகிறது.

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    அயிலை-300, மத்தி- 250, வஞ்சரம்- 900, விளா மீன்- 350, தேங்காய் பாறை - 500, முரல் -350, நண்டு -400, ப்ளூ நண்டு -750, இறால் -700, சீலா -600, வெள்ளை வாவல் - 900, கருப்பு வாவல் - 850, பாறை - 500, மயில் மீன்- 800, பொட்டு நண்டு - 450, கிளி மீன் - 600, மதன மீன்- 500, மஞ்சள் கிளி- 600, கடல் விலாங்கு- 300, திருக்கை- 400. பெரிய திருக்கை-500, நகர மீன்-450, கடல் வாவல்-60.

    • இன்று ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
    • புரட்டாசி மாதம் முடிவடைய உள்ளதால் இன்று முதல் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்து ள்ளன.

    ஈரோடு:

    புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்களில பெரும்பாலானோர் சைவத்துக்கு மாறி ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வந்தனர்.இதனால் மீன், இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது.

    மாறாக காய்கறிகளின் தேவை அதிகரித்து காய்கறிகள் விலையும் அதிகரித்தது. இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் வரும் 4 சனிக்கிழமை நேற்றுடன் முடிவடைந்தது.

    இந்நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை நாளான இன்று ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாக இங்கு வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பொது மக்கள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்கி சென்றனர். குறிப்பாக புரட்டாசி மாதம் என்பதால் கடந்த சில நாட்களாக 5 டன்கள் மட்டுமே மீன்கள் விற்பனைக்கு வந்தன.

    ஆனால் தற்போது புரட்டாசி மாதம் முடிவ டைய உள்ளதால் இன்று முதல் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்து ள்ளன. இன்று மார்க்கெ ட்டில் 10 டன் மீன்கள் வரத்தாகி இருந்தன.

    மக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதன் காரண மாக கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் ரூ.50 மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டன.

    மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    வஞ்சரம்-700, ப்ளூநண்டு-600, ராட்டு-650, சின்னராட்டு-500, கடல்பாறை-450, உளி-350, அயிலை-250, சங்கரா-350, திருக்கை-350, பால்சுறா-500, சீலா- 400, மத்தி-180, கருப்புவாவல்-500.

    ×