search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மின் நகர் மற்றும் ஆஞ்சிநேயா நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அப்பகுதி மக்களிடம் பூங்காவை நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மொடச்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.173 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணி மற்றும் சக்தி மெயின் ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.699.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி அங்காடி கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். கோபிசெட்டி பாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய ஆஸ்பத்திரி சாலை பகுதி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.194.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையப் பணியினையும்,

    தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நகர் பகுதியில் ரூ.30.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை மேம்பாட்டுப் பணியையும், கம்பர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணி மற்றும் சாலையின் தரத்தினையும் என மொத்தம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி நல்லகவுண்டன்பாளையம் இந்திரா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளு க்குளி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பணியினையும், அளுக்குளி கிராம சேவை மையத்தையும்,

    பார்வையிட்டு மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பா டுகள் குறித்து கேட்டறிந்ததுடன் மகளிர் சுய உதவிக் குழு மூலம், சுழல் நிதி கடன் ரூ.50 ஆயிரம் பெற்று பாக்கு மட்டை தயாரிக்கும் குழுக்க ளின் பணியினையும் என பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ரூ.51.87 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலிங்கியம் ஊராட்சி மல்லிகை நகரில், கோபிசெட்டிபாளையம் வட்டார அளவிலான நர்சரியில் புங்கமரம், பூவரசு, வேப்பமரம், முருங்கை, பப்பாளி, பாதானி, சீதாமரம், மாதுளை, எலுமிச்சை, நாவல், கொய்யா உள்ளிட்ட செடிகள் பதியம் செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×