என் மலர்
நீங்கள் தேடியது "மருந்து கடைக்காரர்"
- வரதராஜன் வெள்ளகோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு 10 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
- விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த ராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (50). இவர் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ருத்ரேஷ் (20) என்ற மகனும் தக்ஷனா (14) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் வரதராஜன் வெள்ளகோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு 10 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மொடக்குறிச்சி அருகே வேலம்பாளையம் பகுதியில் வரதராஜன் வந்து போது எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வரதராஜனுக்கு தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே வரதராஜன் பலியானார். தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் வரதராஜனின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செந்தில் தனக்குத்தானே மண்எ ண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
- சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே கே.ஜி.வலசை அடுத்த களிச்சாங்காட்டுவலசை சேர்ந்தவர் செந்தில் (வயது 41). இவர் சென்னிமலை குமராபுரியில் கடந்த 6 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வந்தார்.
மேலும் தற்போது சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் புதிதாக ஒரு மருந்து கடையை திறந்து 6 மாதமாக நடத்தி வந்தார். மருந்து கடையில் போதிய வருமானம் இல்லாததால் செந்தில் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மருந்து கடைக்கு செல்லாமல் செந்தில் வீட்டிலேயே இருந்துள்ளார்.
அப்போது குளியலறைக்குள் சென்ற செந்தில் தனக்குத்தானே மண்எ ண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக செந்திலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செந்திலின் மனைவி கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போடி திருமலாபுரம் செந்தில்விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தம்பிராஜ் (70). இவர் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
- குடிபோதையில் அவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் செந்தில்விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தம்பிராஜ் (70). இவர் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் போடி முனிசிபல் காலனியை சேர்ந்த கண்ணன் மற்றும் வடிவேலு ஆகியோர் குடிபோதையில் வெட்டுகாயத்துக்கு பேண்டேஜ் கேட்டுள்ளனர். அதற்கு விலை அதிகமாக கேட்டதாக கூறி அவர்கள் தம்பிராஜிடம் தகராறில் ஈடுபட்டனர்.
குறித்த பணத்தை தராவிட்டால் தான் பேண்டேஜ் வழங்க முடியாது என தம்பிராஜ் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் கத்தியால் அவரை சரமாரியாக கீறி கொைல மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கண்ணன் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






