என் மலர்
ஈரோடு
- வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
- வேனில் இருந்தவர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
கொடுமுடி:
தேனியில் இருந்து ஒரு சுற்றுலா வேனில் பெரியவ ர்கள் 18 பேர், ஒரு குழந்தை உட்பட 19 பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று இரவு கொடுமுடி மகுடே ஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு பவானி சங்மே ஸ்வரர் கோவிலுக்காக வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இரவு 8.30 மணி அளவில் கருவேலம்பா ளையம் என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது ரோட்டின் குறுக்கே நாய் ஒன்று ஓடியுள்ளது.
அதன்மீது வேன்மோதாமல் இருப்பதற்காக முயற்ச்சித்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்தவர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். வேன் கவிழ்ந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ்சுகள் அங்கு காயம்பட்டிருந்தவர்களை அழைத்துக் கொண்டு கொடுமுடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற காயம்பட்டவர்கள் பின்னர் அங்கிருந்த தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இரவோடு இரவாக கவிழ்ந்த வேனையும் அவர்கள் மீட்பு வாகனம் மூலம் எடுத்து சென்றனர்.
- பாம்பு ஒன்று கனகராஜை கடித்து விட்டது.
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவா னிசாகர் ரோடு மாமரத்து தோட்டம் அய்யன் சாலை பகுதியைச் சே ர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கனகராஜ் அவருக்கு சொந்தமான நிலத்தில் சம்பங்கி, வாழை பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மாலை அவரது சம்பங்கி தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று ள்ளார். அப்போது வர ப்பில் நடந்து சென்ற போது பாம்பு ஒன்று கனகராஜை கடித்து விட்டது. இதை யடுத்து அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவிக்குப் பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் கனகராஜ் குடும்பத்தினரின் விருப்ப த்தின் பேரில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும், கோவையில் உள்ள தனியார் மருத்து வமனையில் கனகராஜ் சிகி ச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது உடலில் விஷத்தின் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் நேற்று அதிகாலை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனகராஜ் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து சத்தியமங்கலம் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு எடுத்து செல்ல உள்ளனர்.
- 400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டி செய்து வழிபட்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 10 அடி விநாயகர் சிலை உள்பட மொத்தம் 36 சிலைகள் சத்தியமங்கலம் சாலை, பவானிசாகர் சாலை,
மாதம்பாளையம் சாலை, நம்பியூர் சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு எடுத்து செல்ல உள்ளனர்.
இன்று மாலை நடக்க இருக்கும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சிலைகள் செல்லும் அனைத்து சாலைகளிலும், முக்கிய வீதிகளிலும் சி.சி.டி.வி. கேமிராக்களை பொருத்தப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்சனை மற்றும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை யிலான போலீசார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமால், இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
- அணையின் நீர்மட்டம் 73.63 அடியாக சரிந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொ ள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 73.63 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடி 1,475 ன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்ப டுகிறது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- மொபட்டில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார்.
- சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார்.
சிவகிரி:
திருப்பூர் மாவட்டம் சேனாபதிபாளையம் அருகே ஏக்கதான்வலசை சேர்ந்தவர் கார்த்திகேயன் (31) .தொழிலாளி. இவர் கொடுமுடி அருகே உள்ள ஒரு தனியார் புளூமெட்டல் நிறுவனத்தில் தொழிலாளி யாக உள்ளார்.
இவர் சம்பவத்தன்று கொடுமுடி அருகே உள்ள பெருமாகோயில்புதூர் எலந்ததோப்பு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கார்த்தி கேயனுக்கு தலை யில் பலத்த அடிபட்டு ள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்தி கேயனை மீட்டு சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை க்காக கொண்டு சென்று ள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார். இசசம்பவம் குறித்து சிவகிரி போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.
- நதியா திடீரென மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார்.
- சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சி சோலை புதூர் பகுதியை சேர்ந்தவர் நதியா (38).
இவர் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர் பந்தலில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நதியா திடீரென மனம் உடைந்து எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணி சுமை காரணமாக தற்கொ லைக்கு முயன்றாரா? என தெரியவில்லை.
இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 10 நாட்களாக சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மலைப்பகுதியில் கடாமான் ஒன்று சுற்றி வந்தது.
- வாகன ஓட்டிகளின் ஹாரன் சத்தத்தை கேட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, மான், சிறுத்தை கடாமான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த 10 நாட்களாக சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மலைப்பகுதியில் கடாமான் ஒன்று சுற்றி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கடாமானை சிறுத்தை தாக்கி கொன்று அதன் உடல் பாகத்தை தின்று கொண்டு இருந்தது.
அப்பொழுது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் ஹாரன் சத்தத்தை கேட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. பின்னர் இதுகுறித்து கடம்பூர் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த கிடந்த கடாமானை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இரவு நேரங்களில் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் தங்களது கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிக்கொண்டு, நல்ல பிரகாசமான வெளிச்சம் கொண்ட ஒளி விளக்குகளை பொருத்திக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி வெளியே நிற்க வேண்டாம் என கூறியுள்ளனர்.
- யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி தப்பியோட முயன்றார்.
- விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம், செப்.22-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புது வடவள்ளி அட்டமொக்கை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (63). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
ராமசாமி அதேப் பகுதியில் சொந்தமாக ஒன்றை ஏக்கர் நிலம் வைத்து பயிரிட்டுள்ளார். வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் அடிக்கடி யானை தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ராமசாமி நேற்று இரவு வழக்கம் போல் தனது விவசாய தோட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார். தோட்டத்தில் அவர் நாய் வளர்த்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ராமசாமி தோட்டத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நாய் கூரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தார்.
அப்போது ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ராமசாமி தோட்டத்திற்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது. யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தூக்கி வீசி அவரது காலில் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
யானை தாக்கி உயிரிழந்த ராமசாமி குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. தொடர்ந்து மீதி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
- நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
- சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள மலை கிராம பகுதி யான திங்களூர் பஞ்சாயத்து 8 கிராமங்களை உள்ளடக்கியது.
இதில் தொட்டிகாடட்டி செல்லும் மக்களு க்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. பல வருடமாக இருக்கும் இந்த நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
பெய்த கனமழையால் மேற்கூரைகள் பெய்து எப்பொழுது வேண்டு மானாலும் இடியும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த நிழற்குடையில் நிற்கும் பயணிகள் ஒருவித அச்சத்து டன் நின்று வருகின்றனர்.
இது பற்றி திங்களூர் ஊராட்சி யில் பலமுறை கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
மேலும் கிராம சபை கூட்டத்திலும் இந்த நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்த னர்.
பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்து பெரிய அசம்பா விதம் ஏற்படுவதற்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- ஆணையை மனுதாரர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மனுதாரர்கள் தங்களது விண்ணப் பங்களை பொது இ-சேவை மையங்களில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் புலவரைப்படம், கிரையப் பத்திரம், முகவரிக்கான ஆதாரம் (ஆதார் அட்டை, குடும்ப அட்டை),
சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் 0070-60-109-AA-22738 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக ரூ.600 செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் 19-ந் ேததி முடிய விண்ணப்பம் செய்யலாம்.
இக்குறிப்பிட்ட காலகெடு விற்குப்பின் அதாவது 19-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பெருந்துறை:
பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (வெள்ளிக்கிழமை) செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம்,
கருமாண்டி செல்லிபாளையம், திருவேங்கிடம்பாளையம் புதூர், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப் பாளையம்,
பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
- விதை நெல் ரூ.8.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை, கீழ்பவானி மற்றும் மேட்டூர் வலது கரை பாசனங்களுக்கு இங்கிருந்து தான் தாய் விதை நெல் தரப்படுகிறது.
விவசாயிகள் அதை பயிரிட்டு விதை நெல்லாக உற்பத்தி செய்து மீண்டும் சங்கத்துக்கே வழங்குகின்றனர். அவர் பெறப்படும் விதை நெல்லில் முளைப்பு திறன் 80 சதவீதம், ஈரப்பதம் 13, புரத்தூய்மை 99, பிற ரக கலப்படம் 0.2 சதவீதம் இருந்தால் மட்டுமே விற்ப னைக்கு உகந்ததாக விதை சான்று அலுவலர் மூலம் சான்று அளிக்கப்படுகிறது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனங்களுக்கு கடந்த ஏப்ரல் 21-ந் தேதி திறக்கப்பட்ட நீரை கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதனால் இந்த சங்கத்தின் மூலம் ஐ.ஆர்.20 ரக விதைநெல் 37 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தம் 10 டன் ரூ.3.70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல் பி பி டி (5204) ரக விதை நெல் கிலோ 40 ரூபாய் விலையில் மொத்தம் ஏழரை டன் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை யானது. தவிர பவானி ரக விதை நெல் கிலோ 42 ரூபாய் விலையில், நாலுடன் மொத்தம் 1.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
அதனால் முதல் போகத்தில் மட்டும் சங்கத்தின் மூலம் 21 டன் விதை நெல் ரூ.8.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.






