search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணை நிலவரம்
    X

    பவானிசாகர் அணை நிலவரம்

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 73.32 அடியாக சரிந்து உள்ளது.
    • அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்ப டி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 73.32 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடி 1,589 ன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்ப டுகிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி , குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×