என் மலர்
ஈரோடு
- சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 482-க்கு விற்பனை ஆனது.
சிவகிரி:
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 76 கிலோ எடையு ள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.108.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.182.99 காசுகள், சராசரி விலையாக ரூ.143.22 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 009-க் விற்பனையானது.
இதேபோல அவல்பூ ந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 104 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 221 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனை தேங்காய் பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.65 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.77.5 காசுகள், சராசரி விலையாக ரூ.76.55 காசுகள் என்ற விலைகளிலும், 2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.52.90 காசுகள்,
அதிகபட்ச விலையாக ரூ.71.35 காசுகள், சராசரி விலையாக ரூ.67.65 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 473-க்கு விற்பனையானது.
மொத்தம் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 482-க்கு விற்பனை ஆனது.
- சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
- மருத்துவ குழுவினர் உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர்.
டி.என்.பாளையம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் சுற்று பகுதியில் டி.என்.பாளையம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சூரம்பாறை சரகத்திற்கு ட்பட்ட இச்சிமரக்கொடி க்கால் என்ற இடத்தில் ரோந்து பணியில் இருந்த போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
இதனையடுத்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி கள் நடத்திய விசாரணையில், பாறை சரிவில் தவறி விழுந்து யானை உயிரிழந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் சுதாகர், என்.ஜி.ஓ. ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், வினோபா நகர் வனக்குழு தலைவர் ரங்கநாதன்,
டி.என்.பாளையம் வனச்சரகர் மாரியப்பன், வனவர் பழனிச்சாமி, வனக்காப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர்.
உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் அதே வனப்பகுதி யில் மற்ற உயிரினங்களின் உணவுக்காக அந்த இறந்து போன யானை விட்டப்பட்டது. 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பாறை சரிவில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 73.32 அடியாக சரிந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்ப டி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 73.32 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடி 1,589 ன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்ப டுகிறது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி , குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முடுக்கன் துறை சந்தை பகுதியில் சேர்ந்தவர் கோதண்ட மூர்த்தி (வயது 48). இவரது மனைவி வனிதா (40). இவ ர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர்.
இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ள னர். கோதண்ட மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சக்தியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்திய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோத ண்டமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.
பின்னர் இது குறித்து அவரது மனைவி வனிதா பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெருந்துறை, பவானி, பங்களாபுதூர், புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் பருத்தி கண்மாய் பகுதியை சேர்ந்தவர் பஞ்சு மகன் ராஜ்குமார் (வயது 42), கோவை மாவட்டம் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த மணிமாறன் மகன் ஸ்ரீதர் (32),
பவானி ஈஸ்வரன் கோவில் பகுதி யைச் சேர்ந்த சின்னப்பி ள்ளை என்ற ருக்மணி (70), பங்களாபுதூர் கொங்க ர்பாளையத்தை சேர்ந்த பொன்னக்கால் (60), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் (32), நேதாஜி நகரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் காளிமுத்து (29), கடையா ம்பாளையம் முருகன் மனைவி செல்வி (50), கணக்கம்பாளையம் பாரதி தெரு ஆபிரகாம் (50), பவானிசாகர் தொப்பம்பாளையம் அனுமந்தன் மகன் மாரப்பன் என்ற மாறன் (40) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் இடையா ம்பாளையம் பகுதியில் பொது இடத்தில் மது அரு ந்திய குற்றத்திற்காக கட த்தூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் சந்தோஷ்கு மார் (27) என்ப வர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
- அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகத்துக்குட் பட்ட எண்ணமங்கலம், கோவிலூர், புதுக்காடு வன பகுதியில் ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
அவரது பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து வனத்துறைக்கும் ,பர்கூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை யினர், சிறப்பு போலீஸ் சப்- இனஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற னர்.
அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் இருக்கும். இதனால் அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது.
மேலும் அவர் யார் மற்று ம் எந்த பகுதியை சேர்ந்தவர் அவர் எப்படி அந்த பகுதிக்கு வந்தார். அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.
- 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் அங்கு அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் செல்வகுமார் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.
- இதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தார்.
பெருந்துறை:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). தொழிலாளி. இவர் பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு அருகிலுள்ள சரளை என்ற இடத்தில் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து, அவர் தங்கி இருந்த இடத்திற்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன.
- யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதை கண்ட பக்கர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் வழிபடுவதற்காக ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நாமக்கல், திருச்செங்கோடு மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் பண்ணாரி வனப்பகுதியில் உலா வருகின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வரும் யானைகள் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.
இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகளில் கரும்புகள் ஏற்றி செல்லப்படுவதால் கரும்புக்கட்டுகளை சாப்பிடுவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கரும்புக்கட்டுகளை ஏற்றி சொல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிடுவது தொடர்கதை ஆகி வருகிறது.
மேலும் சாலை நடுவே நின்றுகொண்டு பஸ்களை வழிமறிப்பதும் தொடக்கதையாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை திடீரென பண்ணாரி கோவில் முன் மைசூரு நெடுஞ்சாலை ரோட்டில் நடமாடியது. இதைத்கண்ட கடைக்காரர்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதை கண்ட பக்கர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு வனத்துறையினர், பொதுமக்கள், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.
- மாணவிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் படியில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.
- கூடுதல் பஸ் விடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.
தாளவாடி:
தாளவாடி சுற்று வட்டார பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தாளவாடி, சூசைபுரம், மல்லங்குழி, பனக்கள்ளி ஆகிய பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் படியில் தொங்கிய படி ஆபத்தான முறையில் தினந்தோறும் பயணம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து சூசைபுரம் வழியாக பனக்கள்ளி நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் போதிய இடம் இல்லாத காரணத்தால் படியில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.
இது பற்றி மாணவ- மாணவிகள் கூறும்போது,
காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டு மென அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப் பட்டுள்ளதாகவும், இது வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பஸ் விடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.
- வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பரமே ஸ்வரன் (வயது 44). இவருக்கு திருமணமாகவில்லை.
பரமேஸ்வரன் இவரது தாயார் சாந்தாவுடன் (74) வசித்து வந்தார். பரமே ஸ்வரனின் சகோதரி காவே ரி (46) தனது கணவ ருடன் சென்னையில் வசி த்து வருகிறார்.
பவானி ரோடு மாயபுரம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பரமேஸ்வரன் கேஷியராக பணியாற்றி வந்தார்.
பரமேஸ்வரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பரமேஸ்வரன் வழக்கம்போல வேலைக்கு செல்வதாக தனது தாயா ரிடம் கூறிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் பெட்ரோல் பங்குக்கு சென்ற பரமே ஷ்வரன் தனக்கு மன அழுத்தம் காரணமாக நான் நாளை வேலைக்கு வருகி றேன் உன கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெட்ரோல் பங்கிற்கு பின்புறம் காலிங்க ராயன் வாய்க்கால் கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது செல்போன், ஏ.டி.எம். கார்டு, கண்ணாடி, வண்டி யின் சாவி ஆகியவற்றை வண்டி பெட்டியில் வைத்து விட்டு வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரமே ஸ்வரன் சகோதரி காவே ரிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து காவேரி அளி த்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் அந்தியூர் பேரூராட்சி இணைந்து அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அந்தியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் உணவகங்களில் கலர் பொடி, அர்ச்சனா பவுடர், பழைய இறைச்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு எச்சரிக்கை செய்தனர். அந்தியூரில் 15 உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பழைய சமைத்த உணவு 5 கிலோ, பழைய மீன் 2 கிலோ, கலர் பவுடர், பழைய புரோட்டா உள்ளிட்டவைகளை கைப்பற்றி அளிக்கப்பட்டது.
மேலும் உணவின் தரம் பற்றி புகார் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு கடைக்கும் ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.






