என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாடிய 10 பேர் கைது
    X

    சூதாடிய 10 பேர் கைது

    • அந்த பகுதியில் சிலர் சூதாடிக்கொண்டிருந்தனர்.
    • போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் அனில்தோட்டம் பகுதியல் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றுவருவதாக கொடுமுடி சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமிக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சிலர் சூதாடிக்கொண்டிருந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்த சிவராஜ் (55), கொடுமுடி அக்ரஹாரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (56) உட்பட 10 பேர் சூதாடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 10 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 400 ஆகியவற்றை கைப்பற்றினர்.

    Next Story
    ×