அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது

ஒரு முதியவர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை நடத்தினர்.
அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு முதியவர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இருந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கடத்தூர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com