என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A male elephant died"

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
    • மருத்துவ குழுவினர் உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் சுற்று பகுதியில் டி.என்.பாளையம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    சூரம்பாறை சரகத்திற்கு ட்பட்ட இச்சிமரக்கொடி க்கால் என்ற இடத்தில் ரோந்து பணியில் இருந்த போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

    இதனையடுத்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி கள் நடத்திய விசாரணையில், பாறை சரிவில் தவறி விழுந்து யானை உயிரிழந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் சுதாகர், என்.ஜி.ஓ. ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், வினோபா நகர் வனக்குழு தலைவர் ரங்கநாதன்,

    டி.என்.பாளையம் வனச்சரகர் மாரியப்பன், வனவர் பழனிச்சாமி, வனக்காப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

    உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் அதே வனப்பகுதி யில் மற்ற உயிரினங்களின் உணவுக்காக அந்த இறந்து போன யானை விட்டப்பட்டது. 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பாறை சரிவில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×