என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்பூங்கொடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு நன்செய் பட்டாதாரர் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்பூங்கொடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டு ள்ளது. வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.

    ஆகையால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடக்கோரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமதாஸ் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மஞ்சளாறு நீர்த்தேக்க த்திலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோ ட்டை வட்டத்துக்கு உட்பட்ட வத்தல க்குண்டு, பழைய வத்தல க்குண்டு, கணவா ய்பட்டி,

    குன்னுவ ராயன் கோட்டை ஆகிய கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெருக்கி விவசாயிகள் தங்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் பொது ப்பணித்துறை அலுவல ர்களுக்கு உத்தர விடுமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போது நீரினை பயன்படுத்துவோர் சங்க துணை தலைவர் ஜெயபால், செயலாளர் மணிபாரதி, பொருளாளர் பாலமுருகன், உறுப்பினர்கள் முருகன், அழகர்சாமி, குணசேகரன் ஆகியோர் அருகில் இருந்தனர்.

    • போலீசார் ரோந்தின் சென்றபோது கே.சி.பட்டியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் அருகே கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது கே.சி.பட்டியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில், அவர்கள் குப்பமாள்பட்டியை சேர்ந்த செந்தில் (வயது 38), பெரும்பாறையை சேர்ந்த ராம்குமார் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மின்தடையை கண்டித்து மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.
    • மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலமேட்டுபட்டி உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறனர்.

    இந்தநிலையில் இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் இதனால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைவதாக கூறி மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.

    அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், பூபதி மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் யூசிப் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    • ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • 2-வது நாளாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கனரக வாகனங்கள் வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என பல்நோக்கு சேவை திட்டத்தின் மூலம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மேலும் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் இத்திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று 2-வது நாளாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமையில் ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சங்கங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • திண்டுக்கல் மாநகராட்சி டெங்கு கொசுக்கள் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
    • திண்டுக்கல்லில் தினந்தோறும் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கழிவுநீர் ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல் மாநகராட்சி டெங்கு கொசுக்கள் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தனிப் பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நகர ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேட்டுப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை கமிஷனர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திண்டுக்கல்லில் தினந்தோறும் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது.

    • பெரியமலையூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பி.எஸ்.என்.எல் செல்போன் டவர் அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது.
    • தொடர்ந்து வலசு பகுதியில் புதிய ரேசன் கடையை அவர் திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார்.

    நத்தம்:

    நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியமலையூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பி.எஸ்.என்.எல் செல்போன் டவர் அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். தாசில்தார் ராமையா, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, யூனியன் ஆணையாளர்கள் சுமதி, பத்மாவதி, ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேலுச்சாமி எம்.பி. பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து வலசு பகுதியில் புதிய ரேசன் கடையை அவர் திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார். இதில் மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மணி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, நத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகிச் சென்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
    • அ.தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேர்தல் பணிக்குழு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேன்மொழி எம்.எல்.ஏ., மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகிச் சென்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனால் வெற்றிநடை போட்டு வருகிறோம். இத்தனை நாட்கள் காலில் கட்டையைக் கட்டிக் கொண்டு ஓட்டப்பந்தையத்தில் ஓடுவது போல் இருந்தது. நமது வெற்றி இலக்குக்கு இடையூறாக இருந்த பா.ஜனதா நீக்கப்பட்டு விட்டது. இதனால் அ.தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. 2 ஆண்டுகள் கூட அரசியல் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி எல்லாம் தெரிந்ததைப் போல் பேசுகிறார். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து தற்போது நம்மையும் கடத்து விட்டார். கூட்டணியில் இருந்து கொண்டே ஜெயலலிதாவை விமர்சனம் செய்கிறார். கூட்டணி தர்மத்தை மீறியுள்ளார். அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றிய பிறகாவது அவர் திருந்துவார் என்றால் இல்லை, மேலும் தனது பெயரிலேயே அண்ணாவை வைத்துக் கொண்டு பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது? என் மண் என் மக்கள் தவறான தலைப்பு. இதை நாம் ஆதரிக்க கூடாது என நான் கூறினேன். கர்நாடகாவில் காக்கிச் சட்டை போட்ட போலீஸ் அண்ணாமலைக்கு எப்படி இந்த மண் சொந்தமாகும். அவர் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். கூட்டணியில் இருந்து கொண்டே நம் தலைவர்களை விமர்சனம் செய்தால் எப்படி பொறுத்துக் கொள்வது? அ.தி.மு.க.வுக்கு என கொள்கை, குறிக்கோள், லட்சியம் உள்ளது. நமது கொள்கையில் அவர்களுக்கு முரண்பாடு உள்ளது. பக்குவம் இல்லாத அரசியல்வாதியாக அண்ணாமலை உள்ளார்.

    அரசியல் முதிர்ச்சி இல்லை. தமிழகத்தில் உள்ள பா.ஜனதா கட்சியில் பாதி பேர் ரவுடி, கந்து வட்டிக்காரர்களாக உள்ளனர். மூத்த உறுப்பினர்கள் இவர்களது ஆட்டம் பாட்டத்தை விரும்பவில்லை. பாரதிய ஜனதாவுக்கு தமிழகத்தில் தனித்து நிற்கும் சக்தி கிடையாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது. அதன் பிறகு அவர்கள் சக்தி என்ன என்று அவர்களே தெரிந்து கொள்வார்கள்.

    தி.மு.க. திராவிட கட்சி அல்ல. கருணாநிதி கட்சியாக உள்ளது. கருணாநிதி அதனைத் தொடர்ந்து ஸ்டாலின், உதயநிதி என குடும்ப கட்சியாக மாறி விட்டது. அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் உள்ளனர். மத்திய அரசுக்கு பயந்து அவரை விமர்சிக்க தி.மு.க.வினர் தயங்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் தவமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கபாண்டியன், மாவட்ட பிரதிநிதி சேசுராஜ்,முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் அண்ணாமலை, சிறுபான்மையினர் மாவட்ட பொறுப்பாளர் சிமியோன் ராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் புரட்சிமணி, எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முனியப்பன், நகர பொருளாளர் பூக்கடை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தப்பட்டு பள்ளியறைக்கு பின்பு நடை சாத்தப்படும்.
    • ராக்கால பூஜை தொடங்கியவுடன் கோவில் கதவு அடைக்கப்பட்டுவிடும்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    நேற்று புரட்டாசி மாத கார்த்திகை என்பதால் மாலை சாயரட்சை பூஜைக்கு பின்பு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருகை தந்தனர். நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து தங்கரதம் இழுத்தும் வழிபாடு செய்தனர்.

    வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 9.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தப்பட்டு பள்ளியறைக்கு பின்பு நடை சாத்தப்படும். ராக்கால பூஜை தொடங்கியவுடன் கோவில் கதவு அடைக்கப்பட்டுவிடும். அதன்பின்பு பக்தர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்த நிலையில் இரவு 9.30 மணிக்கு பின்பும் பக்தர்கள் அடிவாரத்தில் காத்திருந்தனர். அவர்கள் மலைக்கோவிலுக்கு வர முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் காவலர்களை தரக்குறைவாக பேசினர்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. காவலர்கள் பக்தர் ஒருவரை அங்கிருந்து வெளியேற்றும்போது அவரது ஆடை கிழிந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனி கோவிலுக்கு ராக்காலபூஜை நேரத்திற்கு பின்பு பக்தர்கள் உள்ளே வர முயற்சிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    நடைசாத்தப்படும் நேரம் என்பதை அடிவாரம் பகுதியிலேயே குறிப்பிட்டு அதன்பிறகு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம். பக்தர்கள், பாதுகாவலர்களிடையே இதுபோன்ற பிரச்சனை அடிக்கடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.
    • புரட்டாசி மாதம் என்பதால் தற்போது அனைத்து கடைகளும் கூட்டம் குறைவாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்கிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் திண்டுக்கல்லுக்கு கடல்மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இருந்தபோதும் புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

    வழக்கமாக புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் தற்போது அனைத்து கடைகளும் கூட்டம் குறைவாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் மீன்கள் விலையும் பாதியாக குறைந்துள்ளது. ரூ.400-க்கு விற்ற நகரமீன்கள் ரூ.250-க்கு விற்கப்பட்டது. இதேபோல் விளாமீன் ரூ.250-க்கும், ரூ.1000-க்கு விற்ற வஞ்சரம் ரூ.600-க்கும் விற்பனையானது. இறால் ரூ.450, புளூ நண்டு ரூ.450 என்ற விலையில் விற்பனையானது. மீன்கள் விலை குறைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    • திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.
    • நகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் நோய் தாக்கிய நாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, முகமது ஹனிபா, ரெங்கராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் நகரில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆர்.வி.நகர், முகமதியாபுரம், பேகம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தடை ஆப்ரேஷன் திட்டம் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ள ப்படவில்லை. இதனால் நகர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் பெருகி உள்ளது. கருத்தடை ஆபரேஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாள மை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராணிகள் நலச் சங்க செயலாளர் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் முற்றுகையிட்டனர்.
    • இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தர்ராஜ். துணைத் தலைவராக இருப்பவர் வசந்தி மயில்வேல். ஊராட்சி மன்ற செயலராக இருப்பவர் பால்ராஜ். இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது பல்வேறு முறையீடு புகார்கள் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யங்கோட்டை ஊராட்சி புதூரில் உள்ள திருமண மண்டபம் அருகே 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதி ரூ.6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் செல்வ மகாமுனி, சரண்யா, இளங்கோவன், முனிராஜ், பரந்தாமன், நாகஜோதி ஆகியோர் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டியபடி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலையின் இருபுறமும் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மு ண்டி 10 மீட்டர் சாலையில் 5 மீட்டர் சாலையை செடி கொடிகள் ஆக்கிரமித்து ள்ளது.
    • செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    திண்டுக்கல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தேனி மாவட்டத்தில் இருந்து செல்வதற்கு சுமார் 20 கி.மீ தொலைவு பயணத்தை மிச்சப்படுத்தும் சாலையாக அடுக்கம்-கொடைக்கானல் சாலை உள்ளது.

    தேனியில் இருந்து காட்ரோடு வழியாக 85 கி.மீ தொலைவில் கொடைக்கா னல் செல்லும் முக்கிய சாலை உள்ளது. அடுக்கம் சாலை வழியாக தேனியில் இருந்து 67 கி.மீ பயணத்தில் கொடைக்கானல் சென்றடையலாம்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் தொடர்ச்சியாக இந்த சாலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வரை முழுமை யாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    நிலச்சரிவு ஏற்பட்ட சில இடங்களில் கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டு உள்ளது.

    இருந்த போதும் இந்த சாலையின் இருபுறமும் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மு ண்டி 10 மீட்டர் சாலையில் 5 மீட்டர் சாலையை செடி கொடிகள் ஆக்கிரமித்து ள்ளது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் சாலையாக அடுக்கம் சாலை மாறி உள்ளது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யப்படாத இடங்களில் செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிக ளுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    தேனி மாவட்டத்திலிருந்து விவசாய பொருட்கள் கொண்டு செல்வதற்கும், சுற்றுலா பயணிகள் இயற்கை கொஞ்சும் அழகை ரசித்து செல்வதற்கும் கும்பக்கரை அருவிக்கு செல்லவும் இந்த சாலை ஏதுவாக இருந்தது. தற்போது இந்த சாலை பராமரிப்பு இன்றி பழைய நிலைக்கு மாறி உள்ளது.

    கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணி கள் கும்பக்கரை அருவிக்கு இந்த அடுக்கம் பாதை வழியாக அதிகளவில் வருகை தருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த சாலையின் அபாய நிலை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. திறக்க ப்பட்டு 3 ஆண்டுகளே ஆன நிலையில் பலமுறை நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டது. இதனால் மலை கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×