search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : திண்டுக்கல்லில் 6 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : திண்டுக்கல்லில் 6 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

    • திண்டுக்கல் மாநகராட்சி டெங்கு கொசுக்கள் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
    • திண்டுக்கல்லில் தினந்தோறும் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கழிவுநீர் ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல் மாநகராட்சி டெங்கு கொசுக்கள் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தனிப் பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நகர ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேட்டுப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை கமிஷனர் ரவிச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திண்டுக்கல்லில் தினந்தோறும் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×