search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தத்தில் முன் அறிவிப்பின்றி மின்தடையை கண்டித்து சாலை மறியல்
    X

    மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நத்தத்தில் முன் அறிவிப்பின்றி மின்தடையை கண்டித்து சாலை மறியல்

    • மின்தடையை கண்டித்து மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.
    • மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலமேட்டுபட்டி உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறனர்.

    இந்தநிலையில் இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் இதனால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைவதாக கூறி மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.

    அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், பூபதி மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் யூசிப் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    Next Story
    ×