search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் சுற்றி திரிந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
    X

    நகர்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்.

    திண்டுக்கல்லில் சுற்றி திரிந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

    • திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.
    • நகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் நோய் தாக்கிய நாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, முகமது ஹனிபா, ரெங்கராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் நகரில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆர்.வி.நகர், முகமதியாபுரம், பேகம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தடை ஆப்ரேஷன் திட்டம் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ள ப்படவில்லை. இதனால் நகர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் பெருகி உள்ளது. கருத்தடை ஆபரேஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாள மை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராணிகள் நலச் சங்க செயலாளர் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×