என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.175.35 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில் அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்து பூமி பூஜையில் கலந்து கொண்டு பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.175.35 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம், தேவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் ரூ 99.45 மதிப்பிலான கூடுதல் கட்டிடம், மேலும் தேவத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கட்டிடத்திற்கு ரூ. 18 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்து பூமி பூஜையில் கலந்து கொண்டு பின்னர் பேசியதாவது, ஒட்டன்சத்திரம் தாலுகா அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய 4 மாடி அளவில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கொ.கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவப் பணியாளர் குடியிருப்பு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டு சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் உள்பட பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்-அைமச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் பழனி துணை இயக்குனர் (சுகாதாரம்) அனிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் பொன்ராஜ், வடக்கு செயலாளர் ஜோதீஸ்வரன், கிழக்கு ஒன்றிய அய்யம்மாள், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் தங்கம், காயத்ரி தேவி தர்மராஜன், அரசு அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களும் கூடியதால் சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
    • பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். கார்த்திகை மாதம் பிறந்தது முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

    இதனால் இன்று காலை முதல் அடிவாரம், மலைக்கோவில், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் கூட்டமே அதிகளவில் தென்பட்டது. இவர்கள் மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களும் கூடியதால் சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சபரிமலையில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் அங்கு தரிசனம் முடித்த பக்தர்கள் பெரும்பாலும் பழனிக்கு வருகின்றனர். இதனால் பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


    • கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
    • மேல்மலை கிராம பகுதியில் எரிபொருள் மையம் ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேல்மலை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வட்டாட்சியர் முத்துராமன்,வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள்,வனத்துறை ஊழியர்கள்,மருத்துவத்துறையினர்,வருவாய்த் துறையினர், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல் மேல்மலைகிராமங்களுக்கு செல்லும் தார் சாலைகள் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையப்பகுதியில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விவசாய பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வது மிகவும் கடினமானதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே மேல்மலை கிராம பகுதியில் எரிபொருள் மையம் ஒன்று அமைக்க வேண்டும் என்றனர்.

    மேல்மலை கிராமப் பகுதியில் விவசாயப் பொருள்களை எடுத்து கொண்டு செல்லும்போது எரிபொருள் நிரப்புவதற்கு கொடைக்கானலுக்கு வர வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது. விவசாய மோட்டார்களுக்கும், விவசாய வேலைகளுக்காக டிராக்டர் போன்றவைகளை பயன்படுத்தவும்,விவசாயப் பொருள்களை ஓட்டி செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதிலும் கடும் சிரமம் உள்ளது என்றனர்.

    மேலும் மேல்மலைப் பகுதியில் இருந்து வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வரும்போது அப்சர்வேட்டரி பகுதியிலிருந்து மூஞ்சிக்கல் சந்திப்பு வரை சாலையில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருவதாகவும் இதற்கு தக்க தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    உடனே நகராட்சி பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என்று கோட்டாட்சியர் அறிவுறுத்தினார்.

    • ஓடை குறிஞ்சி மலர்களிலேயே தற்போது பூத்துள்ள மலர்கள் மணி வடிவத்தில் உள்ளது.
    • அரிய வகை ஓடை குறிஞ்சி மலர்கள் அருகில் சென்று புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விண்ணை முட்டும் மரங்களும் பசுமை போர்த்திய புல்வெளிகளும் தனிச்சிறப்பாக இருந்தாலும் இந்த நகருக்கு பல்வேறு அடையாளங்களும் உள்ளன.

    அரிய வகை தாவரங்களில் தொடங்கி மலைத்தேன், குறிஞ்சி மலர் வரை அடங்கும். மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குறிஞ்சி மலர்களில் ஒருவகையான ஓடைக்குறிஞ்சி தற்போது கொடைக்கானலில் பூக்க தொடங்கி உள்ளது. குறிஞ்சி மலர்கள் குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகை செடிகள் காணக் கிடைக்கின்றன.

    இதில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 30 வகைகளுக்கும் மேலான குறிஞ்சி மலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நீல நிறத்தில் பூக்கும் இதுபோன்ற குறிஞ்சி மலர்கள் மலைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. குறிஞ்சி பூவிலேயே ஏராளமான வகைகள் உண்டு. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர் நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது. தற்போது பூத்துள்ள இந்த ஓடை குறிஞ்சிகள் வருடம்தோறும் பூக்கும் மலர் என்றும் கூறப்படுகிறது.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கொடைக்கானலில் பூத்தது. அதன் பிறகு 2030ல் இந்த நீல குறிஞ்சி மலர்கள் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தற்போது நீரோடைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் குறிஞ்சி மலர்களில் ஒருவகையாக உள்ள ஓடை குறிஞ்சிகள் பூக்க தொடங்கி இருக்கிறது. மேலும் ஓடை குறிஞ்சி மலர்களிலேயே தற்போது பூத்துள்ள மலர்கள் மணி வடிவத்தில் உள்ளது. அதுவும் மிகச்சிறிய பூக்களாக உள்ளதால் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

    நீரோடைகளில் தற்போது பூத்துள்ள ஓடை குறிஞ்சிகள் ஓடை குறிஞ்சிகளா அல்லது ஓடைக்குறிஞ்சிகளிலேயே வேறு ஏதும் வகைகளா? என தோட்டக்கலை துறையினர் ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியவகை ஓடை குறிஞ்சி மலர்கள் அருகில் சென்று புகைப்படங்களும் எடுத்து செல்கின்றனர்.

    • குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது.
    • கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும்.

    திண்டுக்கல்:

    தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முப்பெருந்துறையில் அமைச்சராக பதவி வகித்தார். தற்போது கூட்டுறவுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறை குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டார். இதனையடுத்து ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறையில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கமாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.

    பெரும்பாலான அமைச்சர்கள் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக பதிவு செய்த கருத்துகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெர்சி செந்தில்குமார்.

    முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெர்சி செந்தில்குமார்.


    அதில் உதயநிதி ஸ்டாலின் குறித்து எந்த கருத்துகள் தெரிவித்தாலும் புன்னகையோடு கடந்து செல்வார். எந்தவித பந்தா இல்லாத மிக எளிமையான மனிதர். உங்களை போலவே உங்கள் மனைவியும் மிகவும் எளிமையானவர். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் உங்களுடன் புகைப்படம் எடுக்க ஆசையாக ஓடி வருவோம். அப்போது அன்புடன் அழைத்து உபசரிப்பீர்கள். எங்கள் மகனுக்கு ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார். ஆதவன் சென்னைக்கு வருவதே உங்களை பார்க்கத்தான், கொரோனா காலத்தின்போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும், தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான்.

    குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும். நீங்கள் தமிழகத்தின் மந்திரியாக வரும் காலத்தில் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது ஒவ்வொரு தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவை கட்சியினர் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

    • தன்னால் கல்வி கட்டணமான ரூ.1.50 லட்சத்தை செலுத்த முடியாது என்பதால் தனது மாணவி மருத்துவபடிப்பை கைவிட்டார்.
    • மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து அவரது நர்சிங் படிப்புக்கு தேவையான தொகையை வழங்குவதாக கூறினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்டு சின்னூர் என்ற பழங்குடி கிராமம் உள்ளது. சுமார் 300-க்கும் ேமற்பட்ட குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புக்கு பல்வேறு மலைச்சாலைகளை கடந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் படித்து வருகின்றனர்.

    தினசரி இவர்களால் பள்ளிக்கு செல்லமுடியாது என்பதால் அங்குள்ள அரசு விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். சின்னூர் கிராமத்ைத சேர்ந்த மாணவி மகாலட்சுமி(18) என்பவர் பிளஸ்-2 முடித்துவிட்டு பி.எஸ்.சி நர்சிங் படிக்க விரும்பினார்.

    மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு தனியார் கல்லூரியில் மட்டுமே இடம் கிடைத்தது. ஆனால் தன்னால் கல்வி கட்டணமான ரூ.1.50 லட்சத்தை செலுத்த முடியாது என்பதால் தனது மருத்துவபடிப்பை கைவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமார் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து அவரது படிப்பை தொடர உதவுவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து அவரது நர்சிங் படிப்புக்கு தேவையான தொகையை வழங்குவதாக கூறினர். இதுகுறித்து மத்திய கூட்டுறவு வங்கி வளர்ச்சிபிரிவு உதவி பொதுமேலாளர் லதா தெரிவிக்கையில்,

    வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், இணைப்பதிவாளர் காந்திநாதன், பொதுமேலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் மாணவிக்கு உதவி செய்ய முன் வந்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் பேசியபோது எங்களுக்கு கல்விக்கடன் உதவி வேண்டாம், எங்களால் அதை திருப்பிச்செலுத்த முடியாது என்று தெரிவித்தனர்.

    இதனையடுத்து வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் பணம் வசூலித்து உதவ திட்டமிட்டோம். உயர்அதிகாரிகள், வங்கியின் நிதியிலிருந்து கல்விக்கட்டணத்தை செலுத்தலாம் என ஆலோசனை தெரிவித்தனர். அதனடிப்படையில் கிளை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் சின்னூர் பகுதிக்கு நேரில் சென்று மாணவியை சந்தித்தனர்.

    சோத்துப்பாறை அணையில் இருந்து கல்லாறு வரை சென்றுவிட்ேடாம். அங்கிருந்து 7 கி.மீ கரடுமுரடான மலைஏற வேண்டும். இடையில் ஓடைகளை கடப்பது, மிகுந்த சிரமம் என்பதை அறிந்தோம். நாங்கள் வருவதை அறிந்ததும் மாணவியின் பெற்றோர் எங்களை கல்லாறு பகுதியிலேயே இருக்க அறிவுறுத்தினர். அங்கு காத்திருந்து மாணவி மற்றும் அவரது பெற்றோரை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் மத்திய கூட்டுறவு அலுவலகத்திற்கு வந்தோம்.

    மாணவியின் ஆவணங்களை பெற்று வத்தலக்குண்டு சிளையில் வங்கி கணக்கை தொடங்கி அதில் முதற்கட்டமாக ரூ.70ஆயிரம் வரவு வைத்துள்ளோம். மேலும் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ரூ.25ஆயிரமும், மாணவி கல்லூரியில் சேரும்போது ரூ.80ஆயிரமும் வரவு வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    சின்னூர் மாணவி மகாலட்சுமிக்கு மட்டுமல்லாது அங்குள்ள பல மாணவர்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்ள கிடைக்க தொடங்கியுள்ளன. மாணவிக்கு நர்சிங் கவுன்சிலிங்கில் தேனியை சேர்ந்த தனியர் நர்சிங் கல்லூரியில் இடம் கிடைத்ததாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து அந்த கல்லூரியின் தலைவர் டாக்டர் தியாகராஜனிடமும் பேசினோம். அக்டோபர் 10-ந்தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் நர்சிங் படிப்பிற்கு இணையான ஏ.என்.எம் போன்ற படிப்பில் சேரலாம் என்று தெரிவித்தார்.

    இந்த படிப்பை படித்தால் மாணவி செவிலியராக அவரது ஊரிலேயே பணியாற்றலாம். இதற்கான கட்டணம் ரூ.2லட்சத்தையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். சீருடை, தங்கும்்விடுதி, உணவுக்கான தொகை மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவித்தார். பல்வேறு போராட்டங்களை கடந்து மருத்துவ படிப்பை நனவாக்கிய மாணவிக்கு சொந்த ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • மது வாங்கி தராத ஆத்திரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
    • காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி மாலப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது41). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்

    சம்பவத்தன்று வேலையில் இருந்த தர்மரா ஜிடம் மாலைப்பட்டியை சேர்ந்த மூர்த்தி (31) தனக்கு மதுபானம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி தர்மராஜை கம்பால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் தர்மராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்த மூர்த்தியை வடமதுரை போலீசார் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருந்துகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,60,122 நோயாளிகள் கண்டறி ப்பட்டு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசிய மான சுகாதாரச் சேவைகள் வழங்க ப்படும்.

    மக்களை த்தேடி மருத்துவம் திட்ட த்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள்,

    இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பரா மரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சமுதாய நலப்பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படு த்துகிறார்கள்.

    அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருந்துகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் இதுவரை 31,540 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 14,956 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்க ப்பட்டுள்ளதாக 14,701 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.

    மேலும் 15,932 நோயாளி களுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 11,933 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும் 4 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் மட்டும் 89,066 நோயாளிகள் கண்டறியப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பழனி சுகாதார மாவட்டத்தில் 30,184 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 13,070 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 13,786 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.

    மேலும் 7,208 நோயாளி களுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 6,856 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களு க்குத் தேவையான நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் இதுவரை பழனி சுகாதார மாவட்ட த்தில் மட்டும் 71,056 நோயாளிகள் கண்டறிய ப்பட்டு, மருந்து, மாத்திரை கள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை, 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் பரிசோதனை மூலமாக 61,674 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 28,026 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 28,484 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.

    மேலும் முதுகு தண்டுவடம் செயலிழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளி களை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கெ ன வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசியோ தெரபிஸ்ட் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,60,122 நோயாளிகள் கண்டறி ப்பட்டு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

    • வாலிபர் மது பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். மேலும் மது குடித்து விட்டு வந்து தாய், தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
    • தந்தையை சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்து கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக காமராஜர் சாலையை சேர்ந்த நடராஜன் (வயது55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு தினேஷ் (27) என்ற மகன் உள்ளார்.

    தினேஷ் மது பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். மேலும் மது குடித்து விட்டு வந்து தாய், தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

    சம்பவத்தன்றும் குடிபோதையில் வந்த தினேஷ்குமார் தனது தந்தையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்து தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த நடராஜன் கொைடக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது ெசய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் தான் வேலையின்றி சுற்றி திரிந்ததால் தனது தந்தை இறந்தால் வாரிசு வேலை கிடைக்கும் என்று கொலை செய்ததாக கூறி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீபத்திருவிழா 30-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது.
    • டிசம்பர் 6-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சரவணப்பொய்கையில், 6 செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்தபோது கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். இதனால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு.

    முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில், கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 30-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது. திருவிழாவில் முதல் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பிறகு தங்கரத புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் ஏற்றப்படுகிறது.

    பின்னர் மறுநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை அன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜையும் நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வரப்படுகிறது.

    • பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
    • கோபுரம் மீது தங்கமுலாம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில்நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோவிலில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிப்பிரகாரம், உள்பிரகாரம், கல்தூண்கள் ஆகியவை பழமை மாறாமல் புதுப்பி–க்கப்படுகிறது. கோவில் சுவர்களில் உள்ள சுதைகள் வர்ணப்பூச்சு செய்யப்பட்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

    புதிய பித்தளை கம்பிகள் நிறுவும்பணி மற்றும் சேதமான கல்தூண்களை அகற்றி புதிய தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    உபகோவில்களிலும் ஆகமவிதிப்படி பாலாலய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் மலைக்கோவிலில் மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள தங்ககோபுரத்தை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தங்கம் சரிசெய்யும் பணியாளர்கள் கோவில் உதவி ஆணையர் லட்சுமி முன்னிலையில் தங்க கோபுரத்தை ஆய்வு செய்தனர். கோபுரத்தில் உள்ள தூசுகள், பாசிகள் அகற்றப்பட்டு சேதமடைந்த விபரங்கள் குறித்து பட்டியலிடப்பட்டு அதற்கேற்றாற்போல் தங்கமுலாம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில்நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் வரை விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டுச்சந்தை இந்த வாரம் களையிழந்து காணப்பட்டது.
    • ஆடுகள் விலை குறைந்து விற்பனையான போதிலும் இறைச்சி கடைகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விலை குறையாமல் அதேபோல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் வரை விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டுச்சந்தை இந்த வாரம் களையிழந்து காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் விவசாயிகளிடம் நேரடியாகவே ஆட்டுக்குட்டிகளை வாங்கிச்சென்றனர். தற்போது ஆடுகள் குட்டி ஈன்றுவரும் காலமாகும். இதனால் 3 ஆட்டுக்குட்டிகள் ரூ.10ஆயிரம் வரை விலைபோனது.

    சாதாரணமாக 3 குட்டிகள் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகும். ஆனால் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் இறைச்சி விற்பனை குறைந்துள்ளது. இதனால் ஆடுகளின் விலையும் பாதிக்கு பாதியாக குறைந்து விற்பனையானது. இதேபோல பிராய்லர் கோழிகள் ரூ.170முதல் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் ரூ.220 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டது.

    பனிக்காலங்களில் பிராய்லர்கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதால் நாட்டுக்கோழிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச்சென்றனர். ஆடுகள் விலை குறைந்து விற்பனையான போதிலும் இறைச்சி கடைகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விலை குறையாமல் அதேபோல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு மாதத்திற்கு இதேநிலையில் தான் விற்பனை இருக்கும் என்பதால் பெரும்பாலான வெளியூர் வியாபாரிகள் சந்தைக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.

    ×