என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியின மாணவியின் மருத்துவ கனவு"

    • தன்னால் கல்வி கட்டணமான ரூ.1.50 லட்சத்தை செலுத்த முடியாது என்பதால் தனது மாணவி மருத்துவபடிப்பை கைவிட்டார்.
    • மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து அவரது நர்சிங் படிப்புக்கு தேவையான தொகையை வழங்குவதாக கூறினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்டு சின்னூர் என்ற பழங்குடி கிராமம் உள்ளது. சுமார் 300-க்கும் ேமற்பட்ட குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புக்கு பல்வேறு மலைச்சாலைகளை கடந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் படித்து வருகின்றனர்.

    தினசரி இவர்களால் பள்ளிக்கு செல்லமுடியாது என்பதால் அங்குள்ள அரசு விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். சின்னூர் கிராமத்ைத சேர்ந்த மாணவி மகாலட்சுமி(18) என்பவர் பிளஸ்-2 முடித்துவிட்டு பி.எஸ்.சி நர்சிங் படிக்க விரும்பினார்.

    மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு தனியார் கல்லூரியில் மட்டுமே இடம் கிடைத்தது. ஆனால் தன்னால் கல்வி கட்டணமான ரூ.1.50 லட்சத்தை செலுத்த முடியாது என்பதால் தனது மருத்துவபடிப்பை கைவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமார் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து அவரது படிப்பை தொடர உதவுவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து அவரது நர்சிங் படிப்புக்கு தேவையான தொகையை வழங்குவதாக கூறினர். இதுகுறித்து மத்திய கூட்டுறவு வங்கி வளர்ச்சிபிரிவு உதவி பொதுமேலாளர் லதா தெரிவிக்கையில்,

    வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், இணைப்பதிவாளர் காந்திநாதன், பொதுமேலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் மாணவிக்கு உதவி செய்ய முன் வந்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் பேசியபோது எங்களுக்கு கல்விக்கடன் உதவி வேண்டாம், எங்களால் அதை திருப்பிச்செலுத்த முடியாது என்று தெரிவித்தனர்.

    இதனையடுத்து வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் பணம் வசூலித்து உதவ திட்டமிட்டோம். உயர்அதிகாரிகள், வங்கியின் நிதியிலிருந்து கல்விக்கட்டணத்தை செலுத்தலாம் என ஆலோசனை தெரிவித்தனர். அதனடிப்படையில் கிளை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் சின்னூர் பகுதிக்கு நேரில் சென்று மாணவியை சந்தித்தனர்.

    சோத்துப்பாறை அணையில் இருந்து கல்லாறு வரை சென்றுவிட்ேடாம். அங்கிருந்து 7 கி.மீ கரடுமுரடான மலைஏற வேண்டும். இடையில் ஓடைகளை கடப்பது, மிகுந்த சிரமம் என்பதை அறிந்தோம். நாங்கள் வருவதை அறிந்ததும் மாணவியின் பெற்றோர் எங்களை கல்லாறு பகுதியிலேயே இருக்க அறிவுறுத்தினர். அங்கு காத்திருந்து மாணவி மற்றும் அவரது பெற்றோரை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் மத்திய கூட்டுறவு அலுவலகத்திற்கு வந்தோம்.

    மாணவியின் ஆவணங்களை பெற்று வத்தலக்குண்டு சிளையில் வங்கி கணக்கை தொடங்கி அதில் முதற்கட்டமாக ரூ.70ஆயிரம் வரவு வைத்துள்ளோம். மேலும் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ரூ.25ஆயிரமும், மாணவி கல்லூரியில் சேரும்போது ரூ.80ஆயிரமும் வரவு வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    சின்னூர் மாணவி மகாலட்சுமிக்கு மட்டுமல்லாது அங்குள்ள பல மாணவர்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்ள கிடைக்க தொடங்கியுள்ளன. மாணவிக்கு நர்சிங் கவுன்சிலிங்கில் தேனியை சேர்ந்த தனியர் நர்சிங் கல்லூரியில் இடம் கிடைத்ததாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து அந்த கல்லூரியின் தலைவர் டாக்டர் தியாகராஜனிடமும் பேசினோம். அக்டோபர் 10-ந்தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் நர்சிங் படிப்பிற்கு இணையான ஏ.என்.எம் போன்ற படிப்பில் சேரலாம் என்று தெரிவித்தார்.

    இந்த படிப்பை படித்தால் மாணவி செவிலியராக அவரது ஊரிலேயே பணியாற்றலாம். இதற்கான கட்டணம் ரூ.2லட்சத்தையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். சீருடை, தங்கும்்விடுதி, உணவுக்கான தொகை மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவித்தார். பல்வேறு போராட்டங்களை கடந்து மருத்துவ படிப்பை நனவாக்கிய மாணவிக்கு சொந்த ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    ×