என் மலர்
நீங்கள் தேடியது "மக்களைத் தேடி மருத்துவம்"
- தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற திட்டம்
- களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்!
தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
- கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்.
- வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு.
தஞ்சாவூா்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி பிள்ளையார் நத்தம் பகுதியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்து 1-வது பயனாளிக்கு இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் மருந்து பெட்டகங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தென்னங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில், கடைக்கோடி மனிதர்களுக்கும், மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு போய் சேர்க்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது. அதன்படி, ஒரு திட்டம் துவங்கிய பிறகு, அந்த திட்டம் மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா என ஆய்வு செய்வதில், நமது முதலமைச்சருக்கு நிகர் அவர்தான். இரண்டு கோடி பயனாளர்களை கடந்த நிலையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி, அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் தருவதில், தொற்றா நோய்களை தடுப்பதில் எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்த போது, இந்தியாவில், தமிழகம் தான் என கண்டறியப்பட்டு, யுனைடெட் நேஷன்ஸ் இன்டர் ஏஜென்சி டாஸ்க் போஸ்ட் என்ற விருது கிடைத்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடியில் இரண்டு கோடியே 50-வது லட்சம் பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம். டெங்கு பாதிப்பினால், 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டில் 65 பேர் உயிரிழந்தார்கள். இது தான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால், உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க., தான். கடந்த 11 மாதங்களில், வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். இந்த 9 பேருக்கும் இணை நோய் பாதிப்பு இருந்து, சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்ளதாவர்கள் என தெரியவந்தது. தி.மு.க., பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், ஒரு இலக்கு எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், பெரியளவிலான பாதிப்பு இல்லை. யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முரசொலி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருந்துகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,60,122 நோயாளிகள் கண்டறி ப்பட்டு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசிய மான சுகாதாரச் சேவைகள் வழங்க ப்படும்.
மக்களை த்தேடி மருத்துவம் திட்ட த்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள்,
இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பரா மரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சமுதாய நலப்பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படு த்துகிறார்கள்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருந்துகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் இதுவரை 31,540 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 14,956 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்க ப்பட்டுள்ளதாக 14,701 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் 15,932 நோயாளி களுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 11,933 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் 4 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் மட்டும் 89,066 நோயாளிகள் கண்டறியப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பழனி சுகாதார மாவட்டத்தில் 30,184 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 13,070 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 13,786 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் 7,208 நோயாளி களுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 6,856 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களு க்குத் தேவையான நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் இதுவரை பழனி சுகாதார மாவட்ட த்தில் மட்டும் 71,056 நோயாளிகள் கண்டறிய ப்பட்டு, மருந்து, மாத்திரை கள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை, 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் பரிசோதனை மூலமாக 61,674 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 28,026 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 28,484 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் முதுகு தண்டுவடம் செயலிழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளி களை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கெ ன வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசியோ தெரபிஸ்ட் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,60,122 நோயாளிகள் கண்டறி ப்பட்டு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.
- மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார்.
- முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார்.
சென்னை:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், 'மக்களைத் தேடி மருத்துவம்'. இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கிவைத்தார். தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பெண்களின் சுயமரியாதையை காக்கவும், அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார். முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்றவர்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.
பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களை கேட்டறிந்த முதலமைச்சர், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா, எந்த தேதியில் பணம் வருகிறது, எவ்வளவு தொகை வருகிறது, எந்த வகையாக வந்தடைகிறது, ஏதேனும் குறை உள்ளதா, அலுவலகத்தில் அதிகாரிகள் நன்றாக நடத்துகொள்கிறார்களா? என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
- மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது.
- ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது.
ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.
ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது
சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி - கண்காணித்து - மேம்படுத்தி வரும் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.






