என் மலர்
திண்டுக்கல்
- திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை கைது செய்து தனி வாகனம் மூலம் பழனிக்கு அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகை தந்தார். கவர்னர் வருகையை முன்னிட்டு கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார் உத்தரவின்பேரில் தேனி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலுக்கு கவர்னர் வருகையை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் மசோதாவிற்கு கையெழுத்திடாமல் இருப்பது மற்றும் தமிழக உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் செல்லவில்லை. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை கைது செய்து தனி வாகனம் மூலம் பழனிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் வேறு யாரேனும் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் கவர்னர் தங்கியுள்ள கோகினூர் மாளிகை முன்பு யாரும் உள்ளே வராத அளவிற்கு தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- மாவட்டம் முழுவதும் 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரிஷிவந்தயம் எம்.எல்.ஏ. தலையீடு காரணமாக சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு தாலுகா அலுவலகம், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்கள் மற்றும் 3 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் தலைமையில், மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைத்தலைவர் விஜயராகவன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறையினரின் போராட்டதால் கலைஞரின் மகளிர் உரிமை திட்ட களப்பணி மற்றும் அலுவலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்க கடந்த 25ந் தேதி சட்ட ஆணையம் பிறப்பிக்கப்பட்டது.
- கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அந்தஸ்து மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பகுதி மாற்றுதிறனாளிகள் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி உதவுமாறு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அம்பேத்கார் நகர் விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் மூளை முடக்குவாத மாற்றுத்திறனாளி சர்மிளா, சமூக ஆர்வலர் தமிழ்நாடு லெவல் பெஸ்ட் கூடைப்பந்து விளையாட்டு வீரர் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூடைப்பந்து பயிற்சியாளர் மேலாளர் ஸ்பீடு ரமேஷ் பாபு ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மேலும் தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும் அனுப்பி வைத்தனர். அந்த மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசிய அளவில் பதக்கம் வாங்கும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்க கடந்த 25ந் தேதி சட்ட ஆணையம் பிறப்பிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் மூத்தோர் பிரிவுக்கு தங்கப்பதக்கம் வாங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம், வெள்ளி பதக்கம் வாங்குபவர்களுக்கு ரூ.3 லட்சம், வெண்கல பதக்கம் வாங்குபவர்களுக்கு ரூ.2 லட்சம், மாற்றுத்திறனாளிகள் இளையோர் பிரிவுக்கு தங்கப்பதக்கம் வாங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.3 லட்சம், வெள்ளிப் பதக்கம் வாங்குபவர்களுக்கு ரூ.2 லட்சம், வெண்கல பதக்கம் வாங்குபவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வழங்க ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி. மேலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அந்தஸ்து மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
- 43-ம் ஆண்டு திருவிழா 22ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- இன்று அதிகாலை முளைப்பாரி, அக்னி சட்டி முதலியவைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே சின்னாளப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள சக்தி காளியம்மன், முனியப்பன், ஊர்க்காவல் சாமி கோவிலில் ஆண்டுதோறும் சாமி கும்பிடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 43-ம் ஆண்டு திருவிழா 22ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
30, 31 ஆகிய தேதிகளில் கரகம், மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று இரவு 12 மணிக்கு அழகர் தோப்புக்கு சென்று கரகம் ஜோடித்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று அதிகாலை முளைப்பாரி, அக்னி சட்டி முதலியவைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
ேகாவில் முன்னால் ஆடு பலியிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். அன்னதானமும் நடைபெற்றது.
- வத்தலக்குண்டு லியேனார்டு ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தலைமையிலானமருத்துவக் குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
- தூய்மை பணியாளர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில் வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்குசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாம் தொடக்க விழாவுக்கு வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர்சிதம்பரம் தலைமை வகித்தார்.
வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு, வத்தலக்குண்டு பேரூராட்சி துணைத் தலைவர் தர்மலிங்கம்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சிகளின் துணை இயக்குனர் மனோரஞ்சிதம் குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
வத்தலக்குண்டு லியேனார்டு ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தலைமையிலானமருத்துவக் குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில் வத்தலக்குண்டு பேரூராட்சி தலைமை எழுத்தர்செல்லப்பாண்டி, நிலக்கோட்டை சுகாதார ஆய்வாளர் சடகோபி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.முடிவில் வத்தலக்குண்டு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சரவண பாண்டியன் நன்றி கூறினார்.
- 30-வது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவிகள் டாக்டர் பட்டம் பெறுகின்றனர்.
- தற்போது 2-வது முறையாக கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, டெல்லி அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் 15,375 மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இதில் 785 மாணவிகள் நேரடியாக கவர்னரிடம் பட்டங்களை பெறுகின்றனர். 40 மாணவிகள் தங்களது துறைகளில் பதக்கங்கள் பெறுகின்றனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் மாணவிகளுடன் கவர்னர் ரவி கலந்துரையாடல் நடத்துகிறார்.
30-வது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவிகள் டாக்டர் பட்டம் பெறுகின்றனர். மேலும் 76 மாணவிகள் எம்.பில் பட்டம் பெறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் தலைமையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதன்முறையாக கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அப்துல்கலாம் கலந்து கொண்டார். தற்போது 2-வது முறையாக கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா, பதிவாளர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- அஜித்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜிடம் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்த ரவி மகன் அஜித்குமார் (வயது 27). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நிலக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தியா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்ததால் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வதந்து. இதனையடுத்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2020ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அதன் பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அஜித்குமார் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அஜித்குமார், அவரது மனைவியும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதன் பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி வேலாயுதபுரத்தில் இருந்து கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் நிலக்கோட்டை அனைத்து போலீஸ் நிலையத்தில் சேர்த்து வைக்கும் படி அஜித்குமார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனதாக அஜித்குமாருக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார் தனது மாமனார் வீட்டிற்கு சென்று பார்த்தார். குழந்தை எவ்வாறு இறந்தது என கேட்டபோது அதற்கு மருந்து கொடுத்ததாகவும், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும் கூறி உள்ளனர்.
ஆனால் அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த அஜித்குமார் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜிடம் புகார் அளித்தார். அதில் எனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது உள்ள வெறுப்பில் எனது குழந்தையை கொலை செய்திருக்கலாம். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (30-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
பெரும்பாறை,:
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (30-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதனால் அய்ய ம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு, அய்யங்கோட்டை, சேவுகப்பட்டி, சிங்கார க்கோட்டை, செங்கட்டா ம்பட்டி, போடிகாமன்வாடி, தேவரப்பன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி, பெரு ம்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
- லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
- இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர்
வேடசந்தூர்:
மதுரை செல்லூைர சேர்ந்தவர் அய்யப்பன் (வயது37). இவர் ஒரு லாரியில் கரூரில் இருந்து துண்டுகளை ஏற்றி க்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். லாரியில் மதுரையை சேர்ந்த ராஜா (21), பாண்டி (35) ஆகியோரும் இருந்தனர்.
லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் அய்யப்பன் உள்பட 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திண்டுக்கல்லில் வசித்து வரும் தமிழக வாழ்வு கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
- பாலகிருஷ்ணாபுரம் விஸ்தரிப்பு பகுதி சர்வேயர் நகரில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
திண்டுக்கல்:
கேரளாவில் பிரசித்தி பெற்ற பண்டிகைகளுள் ஒன்று ஓணம் பண்டிகை. பண்டிகை நாளன்று மக்கள் வீட்டின் முன்பு பலவகை வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிடுவர். புத்தாடை அணிந்து, 10க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்து கொண்டாடி மகிழ்வர். ஓணம் பண்டிகை கேரள மாநிலம் மட்டுமின்றி தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல்லில் வசித்து வரும் தமிழக வாழ்வு கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். பாலகிருஷ்ணாபுரம் விஸ்தரிப்பு பகுதி சர்வேயர் நகரில் கேரளாவைச் சேர்ந்த செந்தில் - பினு தம்பதியினர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
10 நாட்களாக வீட்டு வாசலில் மலர்களால் கோலமிட்டு வந்தனர். இன்று பவள மல்லி, தாமரை, வாடாமல்லி, டோரியா, சம்பங்கி உள்ளிட்ட 9 வகையான பூக்கள் கொண்டு 10 அடுக்கு வரிசையில் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் உறவினர்களுடன் பருப்பு, பால் பாயசம், அப்பளம், இஷ்டு, அவியல், ஓலன், காலன், புளி இஞ்சி உள்ளிட்ட 12 வகையான உணவு பதார்த்தங்கள் உடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
- கடந்த 1982-84ம் ஆண்டுகளில் 11, 12-ம் வகுப்புகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
- இதில் 40 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1982-84ம் ஆண்டுகளில் 11, 12-ம் வகுப்புகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 40 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள் பின்னர் புகைப்படம் எடுத்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள துரைசாமிபிள்ளை சிலைக்கு முன்னாள் மாணவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளிக்கு மாணவர்கள் அமரும் இருக்கைகள் வழங்கபட்டது.
இதில் சென்னை மாநகர உதவி காவல் ஆணையர் ராஜசேகர்,பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்சாமி உள்ளிட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார்.
- மாணவியின் சகோதரருக்கு போன் செய்து உனது தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகள் தேவதர்ஷினி (வயது 19). மதுரையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே காட்டூரைச் சேர்ந்த விக்னேஸ்குமார் என்ற வாலிபர் மாணவியின் சகோதரர் பாலக்குமாருக்கு போன் செய்து உனது தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.






