என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "double incentive"

    • மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்க கடந்த 25ந் தேதி சட்ட ஆணையம் பிறப்பிக்கப்பட்டது.
    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அந்தஸ்து மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பகுதி மாற்றுதிறனாளிகள் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி உதவுமாறு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அம்பேத்கார் நகர் விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் மூளை முடக்குவாத மாற்றுத்திறனாளி சர்மிளா, சமூக ஆர்வலர் தமிழ்நாடு லெவல் பெஸ்ட் கூடைப்பந்து விளையாட்டு வீரர் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூடைப்பந்து பயிற்சியாளர் மேலாளர் ஸ்பீடு ரமேஷ் பாபு ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    மேலும் தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும் அனுப்பி வைத்தனர். அந்த மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசிய அளவில் பதக்கம் வாங்கும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்க கடந்த 25ந் தேதி சட்ட ஆணையம் பிறப்பிக்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள் மூத்தோர் பிரிவுக்கு தங்கப்பதக்கம் வாங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம், வெள்ளி பதக்கம் வாங்குபவர்களுக்கு ரூ.3 லட்சம், வெண்கல பதக்கம் வாங்குபவர்களுக்கு ரூ.2 லட்சம், மாற்றுத்திறனாளிகள் இளையோர் பிரிவுக்கு தங்கப்பதக்கம் வாங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.3 லட்சம், வெள்ளிப் பதக்கம் வாங்குபவர்களுக்கு ரூ.2 லட்சம், வெண்கல பதக்கம் வாங்குபவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வழங்க ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி. மேலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அந்தஸ்து மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    ×