நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவி மாயம்

சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார். மாணவியின் சகோதரருக்கு போன் செய்து உனது தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகள் தேவதர்ஷினி (வயது 19). மதுரையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே காட்டூரைச் சேர்ந்த விக்னேஸ்குமார் என்ற வாலிபர் மாணவியின் சகோதரர் பாலக்குமாருக்கு போன் செய்து உனது தங்கையை நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com