என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓணம் பண்டிகை கொண்டாடிய மலையாள குடும்பத்தினர்.
திண்டுக்கல்லில் ஓணம் பண்டிகை கொண்டாடிய மலையாள குடும்பத்தினர்
- திண்டுக்கல்லில் வசித்து வரும் தமிழக வாழ்வு கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
- பாலகிருஷ்ணாபுரம் விஸ்தரிப்பு பகுதி சர்வேயர் நகரில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
திண்டுக்கல்:
கேரளாவில் பிரசித்தி பெற்ற பண்டிகைகளுள் ஒன்று ஓணம் பண்டிகை. பண்டிகை நாளன்று மக்கள் வீட்டின் முன்பு பலவகை வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிடுவர். புத்தாடை அணிந்து, 10க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்து கொண்டாடி மகிழ்வர். ஓணம் பண்டிகை கேரள மாநிலம் மட்டுமின்றி தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல்லில் வசித்து வரும் தமிழக வாழ்வு கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். பாலகிருஷ்ணாபுரம் விஸ்தரிப்பு பகுதி சர்வேயர் நகரில் கேரளாவைச் சேர்ந்த செந்தில் - பினு தம்பதியினர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
10 நாட்களாக வீட்டு வாசலில் மலர்களால் கோலமிட்டு வந்தனர். இன்று பவள மல்லி, தாமரை, வாடாமல்லி, டோரியா, சம்பங்கி உள்ளிட்ட 9 வகையான பூக்கள் கொண்டு 10 அடுக்கு வரிசையில் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் உறவினர்களுடன் பருப்பு, பால் பாயசம், அப்பளம், இஷ்டு, அவியல், ஓலன், காலன், புளி இஞ்சி உள்ளிட்ட 12 வகையான உணவு பதார்த்தங்கள் உடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.