நத்தத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கடந்த 1982-84ம் ஆண்டுகளில் 11, 12-ம் வகுப்புகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்ததுஇதில் 40 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
Published on

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1982-84ம் ஆண்டுகளில் 11, 12-ம் வகுப்புகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 40 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள் பின்னர் புகைப்படம் எடுத்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள துரைசாமிபிள்ளை சிலைக்கு முன்னாள் மாணவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளிக்கு மாணவர்கள் அமரும் இருக்கைகள் வழங்கபட்டது.

இதில் சென்னை மாநகர உதவி காவல் ஆணையர் ராஜசேகர்,பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்சாமி உள்ளிட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com