என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அணைப்பட்டி சாலையின் பகுதியில் அமைந்துள்ள நுழைவுப் பாதையின் வழியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும் பகுதி முட்புதர்களாலும், சாக்கடையாலும் தேங்கி கிடக்கின்றன.
    • பள்ளி வளாக பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் 2வது அணைப்பட்டி சாலையின் பகுதியில் அமைந்துள்ள நுழைவுப் பாதையின் வழியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும் பகுதி முட்புதர்களாலும், சாக்கடையாலும் தேங்கி கிடக்கின்றன.

    இதன் காரணமாக அப்பகுதியை கடந்து செல்லும்போது போது துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகே வகுப்பறை மற்றும் சமையல் கூடம் இருப்பதால் சாக்கடையில் உருவாகும் தொற்றுக்கிருமிகள் மூலமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று இப்பகுதியில் சாக்கடை கழிவுகளால் கொசுக்கள் மற்றும் பாம்பு, பூச்சிகள் பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக வருகிறது.

    எனவே மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பள்ளி வளாக பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் வினித் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரியகோட்டையில் இருந்து ஒரு மினிலாரி விறகு ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் வந்தது. மினி லாரியை வினித் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார்.

    திண்டுக்கல் சாலையில் உள்ள செக்போஸ்ட் டவுண்டானா பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் வினித் காயங்களுடன் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செக்போஸ்ட் டவுண்டா னா அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஏற்கனவே இருந்த சாலையின் மேல் பகுதியில் புதிய சாலை அமைக்க ப்பட்டது.

    இதனால் சாலையின் இரு பக்கமும் பெரிய பள்ளம் உள்ளது. வாகன ங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியா மல் கீழே விழுந்து காய மடைவது தொடர்கதையாகி வருகிறது.

    இதே இடத்தில் மினி லாரியும் கவிழ்ந்துள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது. எனவே முறையாக சாலையை சீரமைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு தலைமை கொறடா கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், பிரசாத ஸ்டால், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

    பழனி:
    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுடமான கோவி செழியன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் இன்று பழனி மலைக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், பிரசாத ஸ்டால், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பா, கார்த்திகேயன், பாபு, பொன்னுச்சாமி, முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் சட்டமன்ற மனுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    • மயானத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி வருவதற்கு பொதுமக்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
    • கட்டிடங்கள் கட்டும் பணியை பார்வையிட வந்த திட்ட இயக்குனரை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட பலக்கனூத்து ஊராட்சி இயங்கி வருகிறது. இங்கு ஊராட்சி நிர்வாகம் மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி வருவதற்கு பொதுமக்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    ஆனால் அதன் வேலை பாடுகள் நடந்து வருகிறது. இதே போல தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராத சிலர் பெயரில் வேலைக்கு வந்தது போல் கணக்கு காட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பணம் எடுத்து வருதல் போன்று இந்த ஊராட்சியில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்ற னர்.

    இது குறித்து ரெட்டி யார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை. இந்நிலை யில் பலக்கனூத்து அருகே தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணியை பார்வையிட வந்த திட்ட இயக்குனர் பொன்னையாவை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதையடுத்து முறைகேடு கள் குறித்து அளிக்கப்பட்ட புகார் மனுவை வாங்கிய திட்ட இயக்குனர் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதியளித்ததின் பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • கொடைக்கானல் அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலை க்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது
    • உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார் . மேலும் அப்பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலை க்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது . இவ்விழாவில் உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார் . மேலும் அப்பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். மாணவி களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

    பெண்கள் அரசு கலைக்க ல்லூரியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. கல்லூரி விரிவுரை யாளர்கள் குறைகளையும் கேட்டறிந்தார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக கூறிய மாணவிகளை மிகவும் உற்சாகத்துடன் பாராட்டினார்.

    தமிழ்நாட்டில் இரு மொழி கல்வியே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். கொடைக்கானலில் பெண்களுக்கு மட்டுமே கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளது. பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் வேண்டுகோளை ஏற்று விரைவில் ஆண்கள் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தங்கும் விடுதி கட்டிட ங்களும் விரிவுபடுத்தப்படும் எனவும் அதற்கான ஆய்வு பணி உடனே தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதில் செந்தில் குமார் எம்.எல்.ஏ., கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, நகர்மன்ற துணைத் தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • 785 மாணவிகள் மருத்துவம், அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று கவர்னர் ரவியிடம் அதற்கான சான்றுகளை பெற்றனர்.
    • நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பிய விஞ்ஞானிகள் குழுவில் பெண்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    785 மாணவிகள் மருத்துவம், அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று கவர்னர் ரவியிடம் அதற்கான சான்றுகளை பெற்றனர். மேலும் 15375 மாணவிகள் பட்டம் பெற விழாவிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த தலைவர்கள் பட்டங்களை வழங்க உள்ளனர்.

    இதுதவிர 40 மாணவிகள் பதக்கங்கள் பெற்றனர். மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய கவர்னர் ரவி இந்தியாவில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பிய விஞ்ஞானிகள் குழுவிலும் பெண்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    இதுபோன்ற சாதனையாளர்களாக மாணவிகள் எதிர்காலத்தில் உருவாகவேண்டும் என்று பேசினார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டெல்லி அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் கலைச்செல்வி, பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா, பதிவாளர் ஷீலா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கவர்னர் ரவி கொடைக்கானல் வருகையை முன்னிட்டு மலைச்சாலை மற்றும் அவர் தங்கும் இடம், பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் கவர்னர் ரவி மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    • கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டது முதல் இது நாள் வரை மண் அள்ளும் எந்திரத்திற்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவாகி உள்ளது.
    • எனவே தீர்மானம் நிறைவேற்றி சொந்தமாக எந்திரம் வாங்கப்படும் என்றார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் துணை தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் மீனா, பொறியாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தேச செலவினம் என்று குறிப்பிடாமல் அதற்குரிய தொகையை குறிப்பிட்ட வேண்டும். இது குறித்து பலமுறை கூட்டத்தில் தெரிவித்த பின்பும் இதுவரை அப்படியே தான் செயல் படுகிறீர்கள் என கவுன்சிலர் கண்ணன் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த கமிஷனர் இனிமேல் செலவு தொகை குறிப்பிடப்படும் என்றார். கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டது முதல் இது நாள் வரை மண் அள்ளும் எந்திரத்திற்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவாகி உள்ளது. இதற்கு சொந்தமாக மண் அள்ளும் எந்திரம் வாங்கி இருக்கலாமே என கவுன்சிலர் கண்ணன் கேட்டார். இதற்கு பதில் அளித்த துணைத்தலைவர் கூறுகையில்,

    அமைச்சரும் நகராட்சிக்கு சொந்தமாக மண் அள்ளும் எந்திரம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே தீர்மானம் நிறைவேற்றி சொந்தமாக எந்திரம் வாங்கப்படும் என்றார். கவுன்சிலர் அனைவரும் அவரவர் வார்டுகளுக்கு ட்பட்ட குறைகளை எடுத்துரைத்தனர். இதற்கு பதில் அளித்த கமிஷனர் மீனா நான் இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். தொடர்ந்து அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • எனது தந்தை மற்றும் தாய் பெயர் அழைப்பிதழில் ஏன் இடம்பெறவில்லை என கேட்டுள்ளார்.
    • கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி கரியாம்பட்டியை சேர்ந்தவர் ஆச்சிமுத்து(78). விவசாயி. இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

    தற்போது 3-வது மகன் காட்டுராஜா என்பவர் அவரது மகளுக்கு திருமணம் வைத்துள்ளார். அந்த திருமண அழைப்பிதழில் முதல் மகன் பெயர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் நேற்று இரவு ஆச்சிமுத்துவின் பேரனான மருதை(27) என்பவர் எனது தந்தை மற்றும் தாய் பெயர் அழைப்பிதழில் ஏன் இடம்பெறவில்லை என கேட்டுள்ளார்.

    அதற்கு ஆச்சிமுத்து அதுபற்றி தனக்கு எப்படி தெரியும். நீ உன் சித்தப்பாவிடமே கேட்டு தெரிந்து கொள் என கூறியுள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மருதை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாத்தா ஆச்சிமுத்துவை சரமாரியாக வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் மருதை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த ரத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே ஆச்சிமுத்து உயிரிழந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மருதையை தேடி வருகின்றனர்.

    மெக்கானிக் வேலை பார்த்து வரும் மருதைக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பட்டர் பீன்ஸ் மற்றும் முருங்கை பீன்ஸ் வகையில் மஞ்சள் தேமல் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்கத்தினால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • விதை நேர்த்தி டிரைக்கோ டெர்மா மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது கார்பெண்டா சிம் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு ஒரு கிராம் என்ற விதத்தில் கலந்து நடவு செய்ய வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் தோட்ட க்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயி களுடன் வேளாண் விஞ்ஞா னிகள் மற்றும் தோட்ட க்கலைத்துறை அலுவலர்கள் சந்தித்து தொழில்நுட்ப விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செண்பகனூர் பகுதியில் நடைபெற்றது. இங்கு பட்டர் பீன்ஸ் மற்றும் முருங்கை பீன்ஸ் வகையில் மஞ்சள் தேமல் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்கத்தினால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ரவீந்திரன் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குனர் காயத்ரி, தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட வயல்களை ஆய்வு செய்து அப்பகுதி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    அப்போது தோட்டக்கலை ஆராய்ச்சி தலைவர் மற்றும் பேராசிரியர் கூறுகையில், பீன்ஸ் வகை பயிர்களில் முதலில் கோடை உழவு செய்ய வேண்டும். விதை நேர்த்தி டிரைக்கோ டெர்மா மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது கார்பெண்டா சிம் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு ஒரு கிராம் என்ற விதத்தில் கலந்து நடவு செய்ய வேண்டும். பின்பு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அட்மா திட்ட மேலாளர் நன்றி கூறினார்.

    • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி வளர்ச்சிக்கு அனைத்து சமுதாயம், ஆண், பெண் படித்திட சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
    • கல்வி படிப்பதற்கு உரிமை இல்லாத காலமாக இருந்ததை மாற்றி தற்போது அதிக பெண்கள் உயர்கல்வி படித்து கல்லூரி முதல்வராகவும் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் நினைவுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

    இதில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வி வளர்ச்சிக்கு அனைத்து சமுதாயம், ஆண், பெண் படித்திட சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதை பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    கல்வி படிப்பதற்கு உரிமை இல்லாத காலமாக இருந்ததை மாற்றி தற்போது அதிக பெண்கள் உயர்கல்வி படித்து கல்லூரி முதல்வராகவும் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இதை உருவாக்கியது தான் திராவிட மாடல் ஆட்சி. பெண்கள் வேலை தேடுவதாக இருப்பதைவிட வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மாணவ-மாணவிகள் நன்கு படித்து வளர வேண்டும் என்பதற்காகவும் வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்பதற்காகவும் அறிமுகப்படுத்திய திட்டம் நான் முதல்வன் திட்டம். மாணவ-மாணவிகளின் உயர்கல்வி தரம் வளர்ச்சி அடைய வேண்டும். ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 23 கல்லூரிகள் உருவாக்கப்பட்டு அது கூட்டுறவு துறையின் மூலமாக ஒரு கல்லூரியும் அரசு கலைக் கல்லூரியும் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை அரசு கல்லூரியில் தொடக்கத்தில் படித்த மாணவிகளின் எண்ணிக்கை விட தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது.

    கல்லூரியில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் வழி கல்வி வகுப்புகள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கல்லூரியில் 766 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இக்கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடம் என பெயர் சூட்டப்படும் என பேசினார். இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம், நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், நிலக்கோட்டை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர பாண்டியன், நிலக்கோட்டை நகரச் செயலாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலையில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையையும் பார்வையிட வருவார்கள்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்கும்போது இங்கும் பண்டிகை தொடங்கிவிடும். பண்டிகை நாட்களில் அரண்மனை முன்பு ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கும். அதில் ஆடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

    ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. மேலும் ஓணம் பண்டிகையான நேற்று அரண்மனை திறக்கப்படவில்லை. அரண்மனை வாசல் இழுத்து மூடப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கம் போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் அரண்மனை மூடப்பட்டிருந்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆண்டுதோறும் ஓணம் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொண்டாடப்படாதது பத்மநாபபுரம் பகுதி மக்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரண்மனை வாசல் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பத்மநாபபுரம் நகராட்சி துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், கவுன்சிலர்கள் வினோத், நாகராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் குமரி ரமேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போதிய நிதி இல்லாததால் இந்த ஆண்டு ஓணம் விழா கொண்டாடப்படவில்லை என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா வழக்கம் போல் கொண்டாட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • மனுவின்மீது கையெழுத்து போடாமல் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் இழுத்தடித்து வந்துள்ளார்.
    • கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோதும் பணம் கொடுத்தால் உடனடியாக வாரிசு சான்று கிடைத்துவிடும் என தெரிவித்துள்ளார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள சீலப்பாடியை சேர்ந்த வரதராஜ் மனைவி அன்னலட்சுமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரதராஜ் இறந்துவிட்டார். இதனைதொடர்ந்து தனக்கு வாரிசு சான்று வழங்ககேட்டு அடியனூத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் அன்னலட்சுமி கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி மனு அளித்தார்.

    ஆனால் அந்த மனுவின்மீது கையெழுத்து போடாமல் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் செந்தில்குமார் அன்னலட்சுமி வீட்டிற்கு வந்தார். அவரது பேரன் நாகராஜிடம் ரூ.2000 கொடுத்தால் உடனடியாக வாரிசு சான்று கிடைக்கும் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோதும் பணம் கொடுத்தால் உடனடியாக வாரிசு சான்று கிடைத்துவிடும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னலட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்க முயன்றபோது மறைந்திருந்த லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கீதா பழனிச்சாமி மற்றும் போலீசார் முருகானந்தத்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல அலுவலகத்திற்கு வரும் பலரிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எமக்கலாபுரத்தில் பணிபுரிந்த முருகானந்தம் கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் இங்கு பணியில் சேர்ந்தார்.

    ×