என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி அருகே கழிவுநீர் செல்லும் காட்சி.
நிலக்கோட்டையில் அரசு பள்ளி முன்பு தேங்கிய கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
- அணைப்பட்டி சாலையின் பகுதியில் அமைந்துள்ள நுழைவுப் பாதையின் வழியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும் பகுதி முட்புதர்களாலும், சாக்கடையாலும் தேங்கி கிடக்கின்றன.
- பள்ளி வளாக பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் 2வது அணைப்பட்டி சாலையின் பகுதியில் அமைந்துள்ள நுழைவுப் பாதையின் வழியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும் பகுதி முட்புதர்களாலும், சாக்கடையாலும் தேங்கி கிடக்கின்றன.
இதன் காரணமாக அப்பகுதியை கடந்து செல்லும்போது போது துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகே வகுப்பறை மற்றும் சமையல் கூடம் இருப்பதால் சாக்கடையில் உருவாகும் தொற்றுக்கிருமிகள் மூலமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று இப்பகுதியில் சாக்கடை கழிவுகளால் கொசுக்கள் மற்றும் பாம்பு, பூச்சிகள் பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக வருகிறது.
எனவே மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பள்ளி வளாக பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






