என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா எல்.-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது .
    • வெற்றிகரமாக விண்ணில் ஆதித்யா எல்-1 செலுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் தேசிய கொடியை அசைத்தும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

    கொடைக்கானல்:

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகில் முதல் நாடாக நிலவில் உள்ள தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா எல்.-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது .

    அதாவது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புற கரோனா குறித்தும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இடைவெளி இன்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து பூமிக்கு செயற்கைக்கோளின் பதிவு செய்யக்கூடிய படங்கள் அதிவேகமாக அனுப்பி வைக்கப்படும்.

    அந்த படங்கள் மூலம் பல கேள்விகளுக்கு பதில்கள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடரப்படும். பிரபஞ்சம் தோன்றியது எப்படி உள்ளிட்ட பல்வேறு அரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இருக்கும். நொடிக்கு 4 புகைப்படங்கள் வரை பூமிக்கு செயற்கைக்கோளிலிருந்து அனுப்பி வைக்கப்படும். ஆதித்யா செயற்கைக்கோளிலிருந்து வரக்கூடிய படங்கள் மற்றும் தகவல்களை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் குறித்து கொடைக்கானல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வு மையத்தில் காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூரியனில் நிகழும் நிகழ்வு குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஆதித்யா எல்-1 செலுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் தேசிய கொடியை அசைத்தும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

    • விற்பனையாளர் மதுபானத்திற்கு பாதி பணம் தரவில்லை. மறுபடியும் ஓசியா என கேட்டு தர மறுத்துள்ளார்.
    • ஆத்திரமடைந்த வாலிபர் விற்பனையாளரை கத்தியால் குத்தியதால் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கூத்தாம்பட்டியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளராக முருகேசன் (வயது 45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது 2 பேர் வந்து மதுபானம் ஓசியாக தருமாறு கேட்டனர். அதற்கு முருகேசன் ஏற்கனவே வாங்கிய மதுபானத்திற்கு பாதி பணம் தரவில்லை. மறுபடியும் ஓசியா என கேட்டு தர மறுத்துள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எப்படி இருந்தாலும் கடையை விட்டு வெளியே வா, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டி உள்ளனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சிறுநீர் கழிக்க முருகேசன் கடையை விட்டு வெளியே வந்தபோது மறைந்திருந்த அவர்கள் 2 பேரும் கத்தி மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் முருகேசனை கத்தியால் குத்தியது மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (34) என தெரியவரவே அவரை கைது செய்தனர்.

    மேலும் அருண்குமாரின் கூட்டாளியை தேடி வருகின்றனர். இந்த கடையில் இதுபோல விற்பனையாளரை ஓசி மதுபானம் கேட்டு தாக்குவது இது 4வது சம்பவமாகும்.

    • பிள்ளையார்நத்தம் ஊராட்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற முப்பிலி ஆண்டவர், கருப்பசாமி மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது.
    • இங்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    நத்தம்:

    செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற முப்பிலி ஆண்டவர், கருப்பசாமி மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது. பொதுமக்கள் வேண்டுதல் வைத்து அது நிறைவேறும் பட்சத்தில் கோவிலில் குதிரை செய்து வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இங்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா நடத்துவது என கிராம மக்கள் ஒன்றுகூடி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து களிமண்ணாலான கருப்பசாமி, முப்பிலி ஆண்டவர், குதிரை, காளை, நாய் உள்ளிட்ட சிலைகளை செய்து வந்தனர்.

    பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை கோவிலில் வைத்து குதிரைகளுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட குதிரைகளை தோளில் சுமந்து வந்து கோவிலில் வைத்து வழிபட்டனர். இங்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கிடாய் மற்றும் சேவல்கள் வெட்டப்பட்டு அன்னதானம் நடந்தது. இதில் கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, செந்துறை, பிள்ளையார்நத்தம்புதூர், குடகிபட்டி, மணக்காட்டூர், நத்தம் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கனமழை காரணமாக வறண்டு கிடந்த அணை ப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
    • இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்ப ட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை, தோப்பு ப்பட்டி, கோடாங்கிநாயக்கன் பட்டி, என்.ஊத்துப்பட்டி, குளத்துப்பட்டி, சீத்தாபுரம், கோட்டூர், முசுவனூத்து, அணைப்பட்டி, விளாம்பட்டி பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பூ மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கோடைகாலத்தை மிஞ்சி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொது மக்கள் சிரமமடைந்தனர். இந்த நிலையில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்ப ட்டது. ஆங்காங்கே மரங்க ளும் சாய்ந்தது. இருந்த போதும் தொடர்மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது உழவு பணியில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் தேங்கி சாலையில் ஓடியது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட னர். எனவே ஆக்கிர மிப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கனமழை காரணமாக வறண்டு கிடந்த அணை ப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    திண்டுக்கல் 34, கொடை க்கானல் ரோஸ்காடன் 36.5, பழனி 5, சத்திரப்பட்டி, 57.6, நிலக்கோட்டை 104.6, வேடசந்தூர் 19.5, புகையிலை நிலையம் 19.5, காமாட்சிபுரம் 4.7 மி.மீ. என மொத்தம் மாவட்டம் முழுவதும் 326.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் பஸ், லாரி, கார், ஜீப் போன்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • இது குறித்து ஆத்தூர் நெடுஞ்சாலைத் துறை யினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை மனு கொடுத்த னர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே மீனாட்சி ஊத்து பகுதியில் இருந்து சித்தரேவு வரை மலைப்பாதை உள்ளது. இந்த சாலையில் அதிகமான வளைவுகள் உள்ளன. மேலும் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் பஸ், லாரி, கார், ஜீப் போன்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளைவுகளில் திரும்பும் போதும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இது குறித்து ஆத்தூர் நெடுஞ்சாலைத் துறை யினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை மனு கொடுத்த னர். அந்த கோரிக்கையை ஏற்று சித்தரேவு-மீனாட்சி ஊத்து இடையே சுமார் 15 கி.மீ தூரம் வரை தார்சா லையின் இருபுறங்களிலும் உள்ள செடி, கொடி, புற்களை எந்திரம் மூலம் வெட்டி அதனை சுத்தம் செய்யும் பணி நடைபெறு கிறது.

    இதனை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறி யாளர் பரத் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.

    • முத்தழகு பட்டி செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் கீரை வியாபாரி. இவர் இன்று காலை வழக்கம்போல் வியா பாரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
    • பலத்த காயமடைந்த வியாபாரியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகு பட்டி செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த வர் நந்தகுமார்(35). கீரை வியாபாரி. இவர் இன்று காலை வழக்கம்போல் வியா பாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து நந்த குமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    பலத்த காயமடைந்த வியாபாரியை அக்கம்பக்க த்தில் இருந்தவர்கள் திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தங்கள் தோழியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
    • மாணவர்களை போலவே இவர்களும் பீர் பாட்டில்கள் வாங்கி வைத்து அதனை ஷாம்பைன் போல குலுக்கி ஒருவர்மீது ஒருவர் ஊற்றி கொண்டாடினர்.

    நிலக்கோட்டை:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் இன்னும் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகள் அருகே இயங்கும் கடைகளால் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு மதுபானம் விற்ககூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான கடைகளில் இது பின்பற்றப்படுவதில்லை.

    இதனால் பல கடைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பதை காணமுடிகிறது. பார்கள் மூடப்பட்டு விட்டாலும் அவர்கள் ஒன்றாக கூடி அருகில் உள்ள இடங்களில் மதுகுடிப்பதும், பின்னர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    மாணவிகள் கொண்டாட்டம்

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தங்கள் தோழியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். மாணவர்களை போலவே இவர்களும் பீர் பாட்டில்கள் வாங்கி வைத்து அதனை ஷாம்பைன் போல குலுக்கி ஒருவர்மீது ஒருவர் ஊற்றி கொண்டாடினர்.

    பின்னர் மதுபானத்தை குடித்து கேக்வெட்டி கொண்டாடி ஆட்டம் போட்டனர். இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வரவே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. இதனிடையே சஸ்பெண்டு செய்யப்பட்ட ஒரு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    நிலக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்குருவெங்கட்ராஜ் மாணவிகளின் எதிர்காலம் கருதி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கினார்.

    மது பழக்கத்தால் மாணவர்கள் சீரழிந்து வந்த நிலையில் தற்போது மாணவிகளும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் குழு இப்பிரச்சினையில் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தனது குழந்தையுடன் பெருமாள்மலை பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்தார்.
    • பஸ்சின் கதவு குழந்தை மீது பலமாக மோதியதால் படுகாயமடைந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது குழந்தை ஆரோன்மேத்யூ(2). தனது குழந்தையுடன் பெருமாள்மலை பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. பஸ்சின் கதவு குழந்தை மீது பலமாக மோதியதால் படுகாயமடைந்தது.

    2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் குழந்தை ஆரோன்மேத்யூ ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்ல வழியில்லாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
    • எனவே இன்று காலை கரூர், கடவூர் செல்லும் சாலையில் கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

    அய்யலூர் அருகே சுக்காம்பட்டி புதுப்பட்டியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனை அகற்றவேண்டும் என கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழையால் குளம், கண்மாய் உள்பட நீர்நிலைகள் நிரம்பின. மேலும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது. இதனால் கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பலமுறை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இன்று காலை கரூர், கடவூர் செல்லும் சாலையில் கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் மற்றும் சுக்காம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், ஊராட்சி செயலாளர் குமரவேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைதொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

    • நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 11 மணிக்கு பின்னரும் மிக கனமழையாக பெய்ததால் சிறிய வணிக நிறுவனங்களுக்கு பணிக்கு சென்றவர்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் சிரமம் அடைந்தனர்.
    • வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார், பியர்சோளா உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மலைக்கிராமங்களில் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பருவ கால விவசாய பயிர்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அவ்வப்போது பகல் நேரங்களிலும் ஒரு சில நாட்களில் இரவு நேரங்களிலும் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 11 மணிக்கு பின்னரும் மிக கனமழையாக பெய்தது. இதன் காரணமாக சிறிய வணிக நிறுவனங்களுக்கு பணிக்கு சென்றவர்கள், அலுவல் பணிகளுக்காக சென்றவர்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் சிரமம் அடைந்தனர்.

    சுமார் 4 மணி நேரம் பெய்த மழையினால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார், பியர்சோளா உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கடந்த சில நாட்களாகவே ஓணம் பண்டிகை விடுமுறைக்காக கொடைக்கானலில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. குறிப்பாக கேரளா சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து கொடைக்கானலை சுற்றிப்பார்த்து ரசித்து வருகின்றனர். மாலை நேரத்தில் பெய்த மழையால் அவர்கள் தங்கள் விடுதிகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    இருந்தபோதும் கன மழையினால் கொடைக்கானலில் ரம்யமான சீேதாசண நிலை காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • பாலாக்குறிச்சி என்ற பகுதியில் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள நொச்சிகுத்துப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி காளியம்மாள் (வயது75).இவர் இன்று காலை எரியோடு ரோட்டில் பாலாக்குறிச்சி என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய வாலிபரும் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரி யில் சேர்க்கப்பட்டு ள்ளார். இது குறித்து வட மதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • தெரு நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன.
    • சாலைகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்தபோதும் சாலையில் கால்நடைகள், நாய்கள் சுற்றித்திரிவதை கட்டு ப்படுத்த முடியவில்லை. குறிப்பாக கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    சாலையின் குறுக்கே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி கடிக்கின்றன.

    இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தெருநாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் கருத்தடை செய்தனர். இதனால் சற்று குறைந்திருந்த நாய்கள் தொல்லை தற்போது மீண்டும் அதிகரி த்துள்ளது. நாகல்நகர், பஸ் நிலையம், ஆர்.எம்.காலனி, ரெயில் நிலையம், பாரதிபுரம், சந்தைபேட்டை, பழனிசாலை உள்பட நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி திரிகின்றன.

    இதனால்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சில ெதருநாய்கள் காயங்களுடன் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு ள்ளது. எனவே சாலைகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×