என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோர செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்.
சித்தரேவு-மீனாட்சி ஊத்து இடையே சாலையோர செடிகளை அகற்றும் பணி
- சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் பஸ், லாரி, கார், ஜீப் போன்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- இது குறித்து ஆத்தூர் நெடுஞ்சாலைத் துறை யினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை மனு கொடுத்த னர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே மீனாட்சி ஊத்து பகுதியில் இருந்து சித்தரேவு வரை மலைப்பாதை உள்ளது. இந்த சாலையில் அதிகமான வளைவுகள் உள்ளன. மேலும் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் பஸ், லாரி, கார், ஜீப் போன்ற வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளைவுகளில் திரும்பும் போதும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து ஆத்தூர் நெடுஞ்சாலைத் துறை யினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை மனு கொடுத்த னர். அந்த கோரிக்கையை ஏற்று சித்தரேவு-மீனாட்சி ஊத்து இடையே சுமார் 15 கி.மீ தூரம் வரை தார்சா லையின் இருபுறங்களிலும் உள்ள செடி, கொடி, புற்களை எந்திரம் மூலம் வெட்டி அதனை சுத்தம் செய்யும் பணி நடைபெறு கிறது.
இதனை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறி யாளர் பரத் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.






