என் மலர்
நீங்கள் தேடியது "இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழை"
- நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 11 மணிக்கு பின்னரும் மிக கனமழையாக பெய்ததால் சிறிய வணிக நிறுவனங்களுக்கு பணிக்கு சென்றவர்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் சிரமம் அடைந்தனர்.
- வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார், பியர்சோளா உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மலைக்கிராமங்களில் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பருவ கால விவசாய பயிர்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அவ்வப்போது பகல் நேரங்களிலும் ஒரு சில நாட்களில் இரவு நேரங்களிலும் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 11 மணிக்கு பின்னரும் மிக கனமழையாக பெய்தது. இதன் காரணமாக சிறிய வணிக நிறுவனங்களுக்கு பணிக்கு சென்றவர்கள், அலுவல் பணிகளுக்காக சென்றவர்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் சிரமம் அடைந்தனர்.
சுமார் 4 மணி நேரம் பெய்த மழையினால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார், பியர்சோளா உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கடந்த சில நாட்களாகவே ஓணம் பண்டிகை விடுமுறைக்காக கொடைக்கானலில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. குறிப்பாக கேரளா சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து கொடைக்கானலை சுற்றிப்பார்த்து ரசித்து வருகின்றனர். மாலை நேரத்தில் பெய்த மழையால் அவர்கள் தங்கள் விடுதிகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இருந்தபோதும் கன மழையினால் கொடைக்கானலில் ரம்யமான சீேதாசண நிலை காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.






