என் மலர்
திண்டுக்கல்
- மலபார் பீடி கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
- ஒரு சாக்கு மூட்டையில் அசல் மலபார் பீடியை போன்று போலியான மலபார் பீடி 20 பண்டல்கள் வைத்திருந்தனர்.
நிலக்கோட்டை:
மதுரை மாவட்டம் கோசி கடை பகுதியை சேர்ந்த வர் தங்கராசு (வயது 51). இவர் மலபார் பீடி கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டி சவுடம்மன்கோவில் பகுதியில் போலி மலபார் பீடி விற்கப்படுவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது அங்கு திண்டுக்கல், பேகம்பூரைச் சேர்ந்த காஜா முகைதீன் (வயது 54) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த காளிமுத்து (வயது 52) ஆகிய 2 பேரும் ஒரு சாக்கு மூட்டையில் அசல் மலபார் பீடியை போன்று போலியான மலபார் பீடி 20 பண்டல்கள் வைத்திருந்தனர்.
உடனே கையும் களவுமாக பிடித்து விளாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரனிடம் ஒப்படைத்து கொடுத்த புகாரின் படி 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள செல்லமந்தாடி பகுதியில் வந்தபோது ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் தவறி விழுந்தார்.
- அவரது அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது.
திண்டுக்கல்:
மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள செல்லமந்தாடி பகுதியில் வந்தபோது ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் தவறி விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது.
கைலாஷ் கன்வார் என்ற அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்த பெண்ணின் உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- இவர் திருமணம் ஆகாத நிலையில் மது போதைக்கு அடிமையானார்.
- இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கொட்டபட்டி பழைய தெரு ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் விக்னேஷ் குமார் (29). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் மது போதைக்கு அடிமையானார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக வைக்கப்பட்டு ள்ளது.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கடஹரசதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
- இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் மற்றும் போலீசார், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கான லில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- இதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடை ந்தனர்.
கொடைக்கானல்:
எழில் கொஞ்சும் அழகும், தலையை முட்டும் மேகக்கூ ட்டங்களும், இதமான தட்ப, வெப்பநிலையும் நிலவுவ தால் கொடை க்கானலை சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகி ன்றனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கான லில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்க ர்ஸ்வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடை ந்தனர். நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள ஏரி ச்சாலை முழுவதும் போக்கு வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
படகு சவாரியும் பல மணிநேரம் நிறுத்தப்பட்டது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வரும் சிறுகடை வியாபாரிகள், ஓட்டல்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கும்பக்கரை செல்லும் சாலையில் புலி நடமாட்டம் உள்ளதாக சமூக வலை தளங்களில் வீடியோ பரவியது.
- இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் தோட்ட காவலுக்கு செல்பவர்கள் அச்சம் அடைந்தனர்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வெள்ளக்கவி, வட்டக்கானல் பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கும்பக்கரை செல்லும் சாலையில் புலி நடமாட்டம் உள்ளதாக சமூக வலை தளங்களில் வீடியோ பரவியது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் தோட்ட காவலுக்கு செல்பவர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் கூறுகையில், பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் இல்லை. சமூக வலை தளங்களில் பரவும் வீடியோ வேறு இடத்தில் எடுக்கப்பட்டது.
இதுபோன்று தவறான பதிவுகளை பதிவிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
- இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபிசிம்ஹாவிற்கு சொந்தமான 15 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை கொடைக்கானலை சேர்ந்த காண்ட்ராக்டர்கள் ஜமீர், காசிம்முகமது ஆகியோர் மேற்கொணடு வந்தனர்.
இவர்களுக்கும், பாபிசிம்ஹாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் தாமதமாகி வந்துள்ளது. இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா காண்ட்ராக்டர்களிடம் கேட்டபோது அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காண்ட்ராக்டர்களுடன் சேர்ந்து பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் நடிகரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் பாபிசிம்ஹா கொடுத்த புகாரின்பேரில் காண்ட்ராக்டர்கள் உள்பட 4 பேர் மீது கொலைமிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் பாபிசிம்ஹா தெரிவிக்கையில், நான் முறையான அனுமதிபெற்றுதான் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறேன். பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தன்னை சமூகஆர்வலர் எனக்கூறிக்கொண்டு வீடு கட்டுவது தொடர்பாக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
இணையதளங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்தி என்மீது களங்கம் ஏற்படுத்தி வருகிறார். என்னையும், எனது தாயாரையும் அவர் மிரட்டிய அனைத்து ஆவணங்களும் உள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கஞ்சா கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல், வெளிநாட்டு பெண்மணியை மிரட்டிய வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
அதேபோல் தன்னையும் அவர் மிரட்டி வருகிறார். பணம் பறிப்பதையே தொழிலாக வைத்துள்ள இவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2023-24ஆம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைத்தளமானது நாளை (4-ந் தேதி) தொடங்கப்பட உள்ளது.
- தகுதியுள்ள மாணவிகள் அனைவரும் தாங்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் வாயிலாக நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல்:
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) தமிழக முதல்-அமைச்சரால் மேல்படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ.யின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
தற்போது 2023-24ஆம் கல்வியாண்டிற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைத்தளமானது நாளை (4-ந் தேதி) தொடங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவிகள் அனைவரும் தாங்கள் கல்வி பயிலும் கல்லூரிகள் வாயிலாக நாளை முதல் ஆதார் எண், கைபேசி எண் (ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்), வங்கிக் கணக்கு எண், பள்ளி சேர்க்கை எண், கல்வி நிலை சேர்க்கை தேதி, கல்வி ஆண்டு, பாடநெறி காலம், படிப்பின் பெயர் ஆகிய விபரங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
- இந்த வழக்கில் வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35).இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.மேலும் இவர் மீது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார்.அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.அதில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு போச்சோ சட்டத்தின் கீழ் (பலாத்காரம்) 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும்,இந்திய தண்டனைச் சட்டம் 363ன் கீழ் (கடத்தல்) 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
- இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
பழனி:
பழனி அருகே பாலசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆண்டுதோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினமும் காலை 7 மணிக்கு சப்பரத்தில் சுவாமி, ஸ்ரீதேவி- பூதேவியுடன் வீதிஉலா நடந்து வருகிறது. அதேபோல் இரவில் அனுமன், பவளக்கால், கருடன், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7-வது நாளன்று அகோபில வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவிக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 1 -ம் தேதி மாலை 6 மணி அளவில் சுவாமி, ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மகசூல் அதிகரித்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வரும் காலங்களில் விலை சற்று உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் பூக்கள் சாகுபடி மற்றும் பல்வேறு விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக நிலக்கோட்டை பகுதியில் மழை பெய்து வந்தாலும் இன்னும் விவசாயப் பணிகளை தீவிரமாக தொடங்கவில்லை. இருப்பினும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு என்.ஊத்துப்பட்டி, தம்பிநாயக்கன்பட்டி, கோட்டூர் , மைக்கேல் பாளையம், சங்கால்பட்டி, பிள்ளையார் நத்தம், சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் புடலங்காய் சாகுபடி செய்தனர்.
தற்போது புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மகசூல் அதிகரித்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி தெரிவிக்கையில்,
புடலங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இந்த புடலங்காய் சாகுபடி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். வரும் காலங்களில் விலை சற்று உயரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
- 100 நாள் வேலை திட்ட நேரத்தை காலை 10 மணி மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பை பொது மக்களுக்கு வழங்குவதால் அடிப்படைத் தேவை களுக்கு உதவியாக இருக் கும் என மத்திய மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதும் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நேரமாகும். இதனால் காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு வர தாமதமாகிறது. மேலும் மாலை 5 மணிக்கு வேலை முடிந்தால் வீட்டுக்கு செல்ல 7 மணி ஆகி விடுகிறது.
அதன் பின்னர் வீடுகளுக்கு உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே 100 நாள வேலை திட்ட நேரத்தை காலை 10 மணி மாலை 4 மணி வரை மாற்ற வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த நாடாளுமன்ற குழுவினரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






