என் மலர்
நீங்கள் தேடியது "புலிகள் நடமாட்டம் இல்லை"
- கும்பக்கரை செல்லும் சாலையில் புலி நடமாட்டம் உள்ளதாக சமூக வலை தளங்களில் வீடியோ பரவியது.
- இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் தோட்ட காவலுக்கு செல்பவர்கள் அச்சம் அடைந்தனர்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வெள்ளக்கவி, வட்டக்கானல் பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கும்பக்கரை செல்லும் சாலையில் புலி நடமாட்டம் உள்ளதாக சமூக வலை தளங்களில் வீடியோ பரவியது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் தோட்ட காவலுக்கு செல்பவர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் கூறுகையில், பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் இல்லை. சமூக வலை தளங்களில் பரவும் வீடியோ வேறு இடத்தில் எடுக்கப்பட்டது.
இதுபோன்று தவறான பதிவுகளை பதிவிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






