என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி: ஆவணி பிரமோற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள்.

    பழனி: ஆவணி பிரமோற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

    • இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    பழனி:

    பழனி அருகே பாலசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆண்டுதோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து தினமும் காலை 7 மணிக்கு சப்பரத்தில் சுவாமி, ஸ்ரீதேவி- பூதேவியுடன் வீதிஉலா நடந்து வருகிறது. அதேபோல் இரவில் அனுமன், பவளக்கால், கருடன், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7-வது நாளன்று அகோபில வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவிக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 1 -ம் தேதி மாலை 6 மணி அளவில் சுவாமி, ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

    பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×