என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கூட்டத்தில் துணைத்தலைவர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் ஏழை-எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் கொண்டு வந்தது.
    • மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள் வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், துணை தலைவருக்கும் தெரியாமல் தீர்மானம் அனுப்பப்படுகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் பூங்கொடி முருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் துணைத்தலைவர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் ஏழை-எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    இந்த தீர்மானத்துக்கு பேரூராட்சி கவுன்சிலர் கோவில்பிள்ளை ஆதரவு தெரிவித்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் துணைத் தலைவர் முருகேசன் பேசுகையில், மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள் வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், துணை தலைவருக்கும் தெரியாமல் தீர்மானம் அனுப்பப்படுகிறது.

    இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே வரும் காலங்களில் அஜந்தா தயாரிக்கும் போது அதனை வார்டு கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்றார்.

    செயல் அலுவலர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


    • மேம்பாலப்பணிக்காக நகர்ப்புறத்தில் 29, ஊரக பகுதியில் 72 குடியிருப்புகள் பாலம் அமைக்கும் பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
    • சர்ச்சைக்குரிய வீடு 50-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீடு இடித்து அகற்றப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் பழனி கேட், திருச்சி கேட், கரூர் கேட் ஆகிய 3 ரெயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இந்த பாதையை கடந்த செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனையடுத்து 3 ரெயில்வே தண்டவாளங்களையும் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இப்பணிகள் தொடங்கப்பட்டு நகர்ப்புறத்தில் 29, ஊரக பகுதியில் 72 குடியிருப்புகள் பாலம் அமைக்கும் பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில் முருகவேல் என்பவர் மட்டும் தனது இடத்தை காலி செய்ய மறுத்துவிட்டார். இதனால் பாலம் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்த பின்பும் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ் சேவை சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பாலகிருஷ்ணாபுரம், கோவிந்தராஜ்நகர், ராஜக்காபட்டி, ஏர்போர்ட்நகர், சிலுவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    முருகவேல் தனது இடத்தை காலி செய்யாமல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது 2 மகன்கள் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அரசு வேலை வழங்கவேண்டும். தான் வசிக்க பட்டாவுடன் கூடிய இடம் வழங்கவேண்டும் என தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டது. சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னரும் முருகவேல் இடத்தை காலி செய்யவில்லை. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இன்று காலை ஏ.டி.எஸ்.பி வெள்ளைச்சாமி தலைமையில் டி.எஸ்.பி உதயகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீடு இடித்து அகற்றப்பட்டது. வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி அங்கிருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தி ஜே.சி.பி மூலம் இடித்து அகற்றினர்.

    அப்போது வீட்டில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முருகவேலின் மனைவி சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் குழந்தைகள் நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு முருகவேலின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்தில் பிரச்சினைக்குரிய வீடு இடிக்கப்பட்டதால் மீண்டும் இப்பகுதியில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் குண்டலப்பட்டி, மல்லி யம்பட்டி, சித்தர்கள் நத்தம், நூத்துலாபுரம், அம்மாபட்டி, சிலுக்கு வார்பட்டி, மைக்கேல் பாளையம், அணைப்பட்டி, சிறு நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

    இதேபோன்று விருவீடு பகுதியில் விருவீடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே விரு வீடு, விராலி மாயன்பட்டி, நடகோட்டை, ராஜதானி கோட்டை , வடக்கு வலைய ப்பட்டி, தெற்கு வலைய ப்பட்டி, குன்னத்துப்பட்டி, காமாட்சிபுரம்,

    சந்தையூர், தாதபட்டி, செக்காபட்டி, ராஜா நகர், மீனான் கன்னிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் மினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

    • குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
    • போக்குவரத்து துறை அதிகாரிகள் இது போன்ற விதி மீறல் பயணங்களை கண்டறிந்து அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் திண்டுக்கல்லு க்கு வந்து செல்கின்றனர். இதே போல் திண்டுக்கல்லில் இருந்து தினந்தோறும் பல்வேறு கிராமங்களுக்கு மில் வேலைகளுக்கு தொழி லாளர்கள் செல்கின்றனர்.

    இது போன்ற பயணங்க ளின் போது போதிய அரசு பஸ்கள் இல்லாததால் மினி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ க்களிலேயே அவர்கள் செல்கின்றனர். குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் செல்வது தொடர்கதையாகி வருகிறது.

    பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்க ளும் இது போன்ற ஷேர் ஆட்டோக்களில் பயணித்து வருகின்றனர். எந்த இடத்தில் வேண்டுமானா லும் ஏறிக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கி கொள்ளலாம் என்ற சிறப்பு வசதி உள்ள நிலையில் இங்கு நிர்ணயிக்க ப்படும் கட்டணங்களை ஏற்று பயணிகள் செல்கி ன்றனர்.

    ஆனால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செல்வதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இது போன்ற விதி மீறல் பயணங்களை கண்டறிந்து அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊரு ராசா, சுப்பிரமணிய புரம், திண்டுக்கல் சாரதி, வியூகம், மோசடி உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ள்ளேன்.
    • தற்போது வேலை இல்லாத காரணத்தால் பாட்டில் சேகரித்து அதனை விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு பாட்டில் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் அந்தோணி (வயது 40). இவர் அதே பகுதியில் பல மாதங்களாக இதே பணியில் ஈடுபட்டு வரு கிறார். பாட்டில் கிடைக்காத சமயங்களில் திரைப்பட பாடல்களை பாடியபடியும், ரஜினி ஸ்டைலில் தீக்குச்சியை தன் உடலில் பற்ற வைத்தும் அப்பகுதி மக்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

    இது குறித்து அவர் தெரிவிக்கையில், நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊரு ராசா, சுப்பிரமணிய புரம், திண்டுக்கல் சாரதி, வியூகம், மோசடி உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ள்ளேன்.

    பட வாய்ப்பு இல்லாத சமயங்களில் எனது சொந்த ஊருக்கு வந்து விடுவேன். தற்போது வேலை இல்லாத காரணத்தால் பாட்டில் சேகரித்து அதனை விற்று வருகிறேன். நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரை தனக்கு தெரியும் என்றும், தன்னால் மிமிக்கிரி உள்ளிட்ட பல திறமைகளை செய்து காட்ட முடியும் என கூறினார்.

    குறிப்பாக ரஜினிகாந்த் படத்தில் வரும் பல்வேறு வசனங்களை பேசிய அந்தோணி அவரைப் போலவே தீக்குச்சியை தனது உடலில் பற்ற வைத்து எரிய வைத்தார். தனக்கு வருவாய் கிடைத்தால் அதில் பாதியை இல்லாதவர்களுக்கு உதவுவேன் என்று தெரிவித்தார்.

    தற்போது கிடக்கும் வருவாய் போதுமானதாக இருந்தபோதிலும் சினிமாவில் நடித்து பெயர் ெபற வேண்டும் என்பதே தனது ஆசை என்றார்.

    • ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் ரோடு தட்டக்குழிக்காடு பகுதியில் ஜீப் சென்று கொண்டு இருந்தபோது திடீரென வனப்பகுதிக்குள் இருந்து வந்த ஒற்றை யானை ஜீப்பை மறித்தது.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் வரும் சமயங்களிலும் இது போன்று யானை வாகனங்களை மறித்து மிரட்டி செல்கிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் தொடர்ந்து யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை குடிநீர் மற்றும் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பீதியடைந்து உள்ளனர்.

    மலை கிராமங்களில் அரசு பஸ் இல்லாத நேரங்களில் பிக்அப் வேன், ஜீப் போன்ற வாகனங்களை பயணத்துக்கு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பாச்சலூரைச் சேர்ந்த அருண்குமார் (வயது 26) என்பவர் தனது கர்ப்பிணி மனைவியான பிரியாவை ஒட்டன்சத்திர த்தில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றார்.

    ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் ரோடு தட்டக்குழிக்காடு பகுதியில் ஜீப் சென்று கொண்டு இருந்தபோது திடீரென வனப்பகுதிக்குள் இருந்து வந்த ஒற்றை யானை ஜீப்பை மறித்தது. இதனால் பயந்து போன டிரைவர் ஜீப்பை வேகமாக ஓட்டினார்.

    இருந்தபோதும் அந்த யானை ஜீப்பை துரத்திக் கொண்டே சென்றது. இதனை அங்கிருந்த விவ சாயி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்க ளில் வெளியிட்டார்.

    ஒரு வழியாக யானையிடம் இருந்து தப்பி ஜீப் அங்கிருந்து வேகமாக சென்றதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் வரும் சமய ங்களிலும் இது போன்று யானை வாகனங்களை மறித்து மிரட்டி செல்கிறது.

    எனவே வனத்துறையினர் கண்காணித்து யானையை அதன் இருப்பிட பகுதிக்கு விரட்டி விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
    • முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள நிலத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரிடம் இருந்து கடந்த 1968-ம் ஆண்டில் விருதுநகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரும் இணைந்து வாங்கினர்.

    இதில் தனது பகுதியான 97 செண்ட் நிலத்தை கொடைக்கானலைச் சேர்ந்த விஸ்வா உருமின் என்பவருக்கு சங்கர் விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை தொடர்பாக பத்திரம் பதிந்து தருவதில் விஸ்வா உருமின், சங்கர் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

    இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு சங்கர் இறந்து விட்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சாந்தி. இவரது கணவர் பெயர் சந்திரசேகர். இந்த பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்த சாந்தி இந்த சொத்துக்களை அபகரிக்க முயன்றார்.

    இதற்காக போலியான ஆவணத்தை தயார் செய்து சங்கர் தனது மகள் சாந்தி, மருமகன் சந்திரசேகர் உள்ளிட்டவர்களுக்கு தானஷெட்டில்மென்ட் எழுதி கொடுத்தார். இந்த போலி ஆவணம் தயார் செய்து ரூ.பல கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த சாந்தியின் கணவர் சந்திரசேகர், இவர்களின் மகன் சித்தார்த், கிருஷ்ணசாமி, கொடைக்கானலைச் சேர்ந்த கணேசன், போலி ஆவணம் தயாரிக்க உதவிய ஆவண எழுத்தர்கள் மருதுபாண்டி, கில்பர்ட், பத்திரபதிவு செய்த முன்னாள் சார் பதிவாளர் முருகேசன், இந்த ஆவணத்தை தயாரிக்க உதவிய வக்கீல்கள் சுதாகர், முகமது மைதீன், ராகவேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரின் மனைவி ஜெயந்தியின் பவர் ஏஜெண்டான கோபி கொடைக்கானல் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற சாந்தி, சந்திரசேகர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் முதல் குற்றவாளியான சாந்தியை போலீசார் கைது செய்ய மற்ற 10 பேர்களை தேடி வருகின்றனர்.

    • கொடலங்காடு அருகே சாலை ஓரத்தில் நின்ற பெரிய மரம் திடீரென வேரோடு சாயந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது.
    • டிரைவர் சாமர்த்திய மாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து மலைக்கிராமங்களான பெரும்பாறை, தடிய ன்குடிசை, மங்களம்கொம்பு, காமனூர் வழியாக தாண்டிக்குடிக்கு தினமும் காலை 10.45 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    நேற்று காலையில் வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு அந்த அரசு பஸ் புறப்பட்ட து. அதில் சுமார் 20 பயணிகள் இருந்தனர். பஸ்சை வத்த லக்குண்டுவை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

    மதியம் 1 மணிக்கு காமனூர் வழியாக மலை ப்பாதையில் அந்த பஸ் தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கொடலங்காடு அருகே சாலை ஓரத்தில் நின்ற பெரிய மரம் திடீரென வேரோடு சாயந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது. இதை கவனித்த டிரைவர் சுரேஷ் சாமர்த்திய மாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரம் சாய்ந்து விழுந்ததை கண்டு பஸ்சை முன் கூட்டியே நிறுத்திய டிரைவரை பயணிகளும், பொது மக்களும் பாராட்டினர்.

    இதுகுறித்து தகவலறிந்த காமனூர் ஊராட்சி ஊழிய ர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் அறுவை எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் தாண்டிக்குடி மலைப்பா தையில், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தாடிக்கொம்பு துணைமின் நிலையத்தில் நாளை (5ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு துணைமின் நிலையத்தில் நாளை (5ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தாடிக்கொம்பு, கிரியாம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசி புரம், உண்டார்பட்டி, தவசிகுளம், மறவபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம் பட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, சில்வார்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அழகுபட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, ஏ.புதுக்கோட்டை, உள்ளிட்ட ஊர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 14 செண்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
    • இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆத்தூர் வட்டம் போடிகாமன் வாடியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் ஊரில் பழமையான முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 14 செண்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

    இதேபோல் நாம்தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட வக்கீல் அணி சார்பில் மவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த மனுவில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை விஜயலெட்சுமி மற்றும் வீரலெட்சுமி ஆகியோர் பொய்யான குற்றசாட்டுகளை கூறி சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர்.

    பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி தனது 5 சகோதரிகள் மற்றும் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
    • இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது 5 மகளுடன் சுப்பம்மாள் புகார் அளித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மனைவி சுப்பம்மாள் (65). இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மகன்களில் ஒருவரான ரெங்கராஜ், சந்தைப்பேட்டையில் உள்ள பத்தாயிரம் சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து, பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி தனது 5 சகோதரிகள் மற்றும் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

    கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த தாய் சுப்பம்மாளை, ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செருப்பு மற்றும் கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்துள்ளார் .

    இதனை அடுத்து இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது 5 மகளுடன் சுப்பம்மாள் புகார் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

    மகன் ரங்கராஜ், மருமகள் பாப்பாத்தி, பேரன் ராம்குமார் ஆகியோர் சொத்தை அபகரித்துக் கொண்டு கையெழுத்து போட வலியுறுத்தி கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் எனது கணவர் சிவபெருமாளை மதுவுக்கு அடிமையாக்கி தன் வீட்டோடு அடைத்து வைத்துள்ளனர். எனவே நடவடிக்கை எடுத்து கணவரை மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில வருடங்களாக வீட்டுக்கே வராமல் இருந்ததால் குடும்ப செலவுக்கும், மகளை படிக்க வைக்கவும் முடியாமல் சிரமப்பட்டார்.
    • இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (வயது 30). இவர்களுக்கு மகாலெட்சுமி (11) என்ற மகள் உள்ளார். இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தராஜூக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வீட்டுக்கு சரிவர வராமல் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். மேலும் மல்லிகாவின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி யுள்ளார். கடந்த சில வருடங்களாக வீட்டுக்கே வராமல் இருந்ததால் குடும்ப செலவுக்கும், மகளை படிக்க வைக்கவும் முடியாமல் சிரமப்பட்டார்.

    இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திடீரென தன் மகள் மற்றும் தன் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது நடந்த விபரங்களை கூறினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×