search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
    X

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

    • கூட்டத்தில் துணைத்தலைவர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் ஏழை-எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் கொண்டு வந்தது.
    • மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள் வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், துணை தலைவருக்கும் தெரியாமல் தீர்மானம் அனுப்பப்படுகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் பூங்கொடி முருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் துணைத்தலைவர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் ஏழை-எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    இந்த தீர்மானத்துக்கு பேரூராட்சி கவுன்சிலர் கோவில்பிள்ளை ஆதரவு தெரிவித்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் துணைத் தலைவர் முருகேசன் பேசுகையில், மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள் வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், துணை தலைவருக்கும் தெரியாமல் தீர்மானம் அனுப்பப்படுகிறது.

    இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே வரும் காலங்களில் அஜந்தா தயாரிக்கும் போது அதனை வார்டு கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்றார்.

    செயல் அலுவலர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


    Next Story
    ×