என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலா ளரும் அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செய லாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலா ளரும் அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கிளை, வார்டு வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும். நலத்திட்ட உதவிகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிய ரங்கம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது. மத்திய அரசு நிதி பற்றா க்குறையை ஏற்படுத்திய போது தேர்தல் காலத்தில் அறிவித்த 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு.

    பெண்களுக்கு விடியல் பயணம், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி. அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைக்க கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வந்த அரசுக்கு நன்றி.

    தேர்தல்பணிக்குழு 100க்கு ஒரு நபர் என தேர்வு செய்து தலைமை கழகத்துக்கு அனுப்பி விரைவில் வாக்குசாவடிகளில் கணக்கெடுக்கும் பணியை தொடங்குவது, வேலூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொள்வது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    கூட்டத்தில் வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், மாவட்ட அவைத்தலைவர் மோகன், துணைச் செயலா ளர்கள் ராஜாமணி, சுந்தர ராஜன், தாமரைச்செல்வி, பொருளாளா் விஜயன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், கண்ணன், வெங்கிடுசாமி, பாலு, செல்வராஜ், சேக்சிக்கந்தா் பாட்சா, முத்துக்குமாரசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • அய்யலூர் வாரச்சந்தையில் போதிய அளவு இடம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையோரம் அதிகளவில் குவிகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தினசரி தக்காளி சந்தை மாலையில் நடைபெற்று வருகிறது. மேலும் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெற்று வருகிறது. அப்போது வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர்.

    வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நாட்டுகோழி, சேவல் மற்றும் ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அடுத்தவாரம் புரட்டாசிமாதம் தொடங்க உள்ளதால் பெரும்பாலோனார் விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் அசைவ உணவுகளை அவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யலூர் சந்தையில் வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்தனர்.

    இருந்தபோதும் விற்பனை ஓரளவு அதிகமாகவே நடைபெற்றது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் குளிரை தாங்கி வளரும் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரித்தது. 10 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.7500 முதல் ரூ.8000 வரை விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது.

    அய்யலூர் வாரச்சந்தையில் போதிய அளவு இடம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையோரம் அதிகளவில் குவிகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் குறித்த நேரத்திற்கு பேருந்தை இயக்க முடியாமல் டிரைவர்களும் அவதிஅடைகின்றனர். சந்தை உரிமையாளர்கள் வசூல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எரியோடு துணைமின் நிலையத்தில் நாளை (8ந்-தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    எரியோடு துணைமின் நிலையத்தில் நாளை (8ந்-தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டை கட்டியூர், சவுடக வுண்டன் பட்டி, மல்வா ர்பட்டி, நல்லமநாய க்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர் பந்தப்பட்டி, சித்தூர், காமாணம்பட்டி, தொட்டணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதம் தெரிவித்து ள்ளார்.

    • கொடைக்கானலுக்கு வரும் மற்ற வாகன ஓட்டுனர்களும் உள்ளூர் வாகனம் என தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.
    • வருகிற 15-ந் தேதி முதல் பாஸ்டேக் முறையில் பணம் வசூலிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இங்கு கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வாகனங்களுக்கு மட்டும் பணம் வசூலிப்பதில்லை. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் மற்ற வாகன ஓட்டுனர்களும் உள்ளூர் வாகனம் என தெரிவித்துவிட்டு செல்கின்றனர். இதனால் சுங்கச்சாவடிக்கு தொடர்ந்து வருமானம் குறைந்து வருகிறது.

    இதையடுத்து உள்ளூர் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் பணம் செலுத்த வசதியாக பாஸ்டேக் நடைமுறையை கொண்டு வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான நடைமுறை பணிகள் முடிந்து வருகிற 15-ந் தேதி முதல் பாஸ்டேக் முறையில் பணம் வசூலிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானல் வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதார் அட்டை, வாகன உரிமம், வீட்டுவரி உள்ளிட்ட ஆவணங்களை நகராட்சி அதிகாரிகளிடம் கொடுத்து பாஸ் வாகன அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 16-க்கும் மேற்பட்ட பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன் வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் (பொறுப்பு) சந்தரி பிரியா தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன், திண்டுக்கல் லயன்ஸ் கிளப் சவுந்தரராஜன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு மாவட்ட மேற்பார்வை யாளர் ஜெசிந்தா, அச்சாணி தன்னார்வ அமைப்பாளர் ஆசிரியர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரையாற்றினர்.

    ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகத்தில் சுண்டல், பாசிப்பயிறு, பேரிச்சம்பழம், முட்டை, வரகு அரிசி, நிலக்கடலை பருப்பு, மலை நெல்லிக்காய், கடலை மிட்டாய் உட்பட 16-க்கும் மேற்பட்ட பொருட்களும், தன்சுத்த கிட் பேக்கில் நகவெட்டி, வாஷிங் சோப்பு, வாட்டர் பாட்டில், கபசுர குடிநீர் பொடி, தாளிசாதி மற்றும் கறிவேப்பிலை பொடி உள்ளிட்ட பொரு ள்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தொற்றா நோய் பிரிவு செவிலியர் நித்யா மற்றும் சரண்யா தேவி பயனாளிகளுக்கு சிற்றுண்டி வழங்கினர்.

    இதில் காசநோய் பிரிவு யூஜின் குமார், ஜான் ஜாய்ஸ், பாலசுப்ரமணியன், கார்த்திகாதேவி, மரிய மெரினா, ஆய்வக நுட்புணர் கவுசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். காசநோய் பிரிவு பாண்டியராஜன் நன்றி கூறினார்.

    • வாலிபர் ரெங்கநாதபுரம் மலைக்கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • கொலை சம்பந்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள செல்லமந்தாடி ரோடு ஓடைபட்டியை சேர்ந்த நடராஜன் மகன் ஆனந்தசுதன் (23). 10ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை இறந்துவிடவே தாய் சிவகாமி (45). அறிவுத்திரு க்கோவில் பைபாஸ் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    நேற்று இரவு ரெங்கநாத புரம் மலைக்கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தசுதன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து டி.எஸ்.பி. உதயகுமார் மேற்பார்வை யில் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், தாடி க்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனி படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொலையில் ஈடுபட்ட லட்சுமிநகரை சேர்ந்த முரளிராஜா (35), குடைபாறைப்பட்டியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (32), கே.கே.நகரை சேர்ந்த இன்னாசி ஸ்டீபன் (31), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின் ஸ்டீபன் (28), அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தியதில் திடுக்கி டும் தகவல்கள் வெளி யானது. அறிவுத்தி ருக்கோ வில் அருகே முரளிராஜா என்பவர் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 2 மாதமாக கடையை பூட்டிவிட்டார். இந்நிலையில் கடையில் வேலை பார்த்த ஆனந்தசுதனின் தாய் சிவகாமி இடத்து உரிமை யாளரிடம் தாங்கள் கடையை நடத்துவதாக கேட்டுள்ளனர். அவரும் சம்மதிக்கவே ஆனந்த் மெஸ் என்ற பெயரில் ஒருவாரமாக கடை நடத்தி வந்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் ஏற்கனவே முரளிராஜா விடம் கடன் கொடுத்தவர்கள் கடைக்கு தேடி வந்துள்ளனர். அவர்களிடம் ஆனந்தசுதன் தனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தற்போது கடையை தானே நடத்து வதாகவும் கூறியுள்ளார். மேலும் முரளிராஜாவின் வீட்டையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனால் கடன் காரர்கள் தினந்தோ றும் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த முரளிராஜா அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி அவரது தினசரி நட வடி க்கைகளை கண்காணித்து நேற்று இரவு கடைமுடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளிராஜா தீர்த்துக்கட்டியுள்ளார்.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்பு டைய கல்லுப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்ற னர்.

    • பஸ்சுக்குள் ஏறிய வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். பயணிகள் சத்தம்போட்டதால் தப்பி ஓடினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜெயகாந்தி (வயது 50). இவர் திண்டுக்கல் அரசு பஸ் டிப்போவில் டிரைவ ராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு நில க்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது செங்கோட்டை பிரிவு அருகே 2 வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் பஸ் ஏறுவதற்காக த்தான் கையை காட்டுகின்ற னர் என்று நினைத்து பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டனர்.

    இதனால் அந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்க ட்ராஜிடம் டிரைவர் ஜெய காந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் செங்கோட்டை யைச் சேர்ந்த இமானுவேல் (29) அஜய்குமார் (22) ஆகிேயார் என தெரிய வந்தது.

    இதனைத் தொட ர்ந்து சப் இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் தலைமை யிலான போலீசார் செங்கோ ட்டைக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் திண்டு க்கல் சிறையில் அடைக்கப்ப ட்டனர். அரசு பஸ்சிலேயே பயணிகள் இருக்கும் போது கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மாவிலை தோரணங்கள் கட்டி, அரிசிமாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
    • கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாட ப்பட்டது. மகாவிஷ்ணுவின் 8வது அவதாரம் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகு லாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மாவிலை தோரணங்கள் கட்டி, அரிசிமாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர். கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.

    திண்டுக்கல் யாதவ மேட்டு ராஜகாபட்டி கிருஷ்ணன் கோவில் பஜனை மண்டபத்தில், சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. மூலவர் வெள்ளி கவசத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவ மூர்த்தி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளி த்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் ராம ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள வேணு கோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீற்றிரு ந்தார். மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவி லில் கிருஷ்ணர் பச்சை பட்டு தலைப்பாகை அணிந்து ராஜ அலங்கார த்தில் காட்சி அளித்தார்.

    திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்ட த்தில், மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நாளை நடைபெறுகிறது.
    • இவ்விழாவில் ஐ.பெரியசாமி உள்பட 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில், மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நாளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவு த்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் - தாடிக்கொம்பு சாலையில் உள்ள பி.வி.கே. மஹாலில் நடைபெறவுள்ளது.

    மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் மாநில நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து அரசு துறைகள் சார்பான தெளிவுரைகள் அமைச்சர்கள், நீதிசார் உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற வுள்ளன.

    மாநில அளவில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது. மேலும் சிறப்பாக பணி புரிந்த ரேசன் கடை விற்பனையாளர்கள், எடை யாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர். அனைத்து அரசு துறைகள் சார்பாக துறைவாரியான கண்காட்சிகள் அமைக்கப்ப டவுள்ளன.

    எனவே நுகர்வோர், நுகர்வோர்களின் உரிமை கள் குறித்தும் மற்றும் அனைத்து அரசு துறைகளில் உள்ள நலப்பணிகள் குறித்து ம் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இவ்விழாவில் கலந்து க்கொண்டு பயன்பெ றலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.
    • காலை உணவு சுத்தமாகவும், சுகாதார மாகவும், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரித்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டு தெரிவித்த தாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் இத்திட்டத்தின் வாயிலாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ, மாணவி களுக்கும் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவி கள் பயனடைந்து வருகின்ற னர்.

    பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியினை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். அறைகளில் அமர வைத்து உணவு வழங்க வேண்டும். உணவு வழங்குவதற்கு முன்னர் சாப்பாடு தட்டுகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் தட்டுகள் சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். அதேபோல் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக கழுவி பயன்படுத்திட வேண்டும். தண்ணீர் வசதி, சுற்றுப்புற தூய்மையை பராமரிக்க வேண்டும்.

    காலை உணவு தயாரிக்கு ம்போது, அரசு அறிவுறுத்தி யுள்ள வழிமுறைகளை பின்பற்றி சத்தான உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும். மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்து, பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். காலை உணவு சுத்தமாகவும், சுகாதார மாகவும், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரித்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு ள்ளது என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • சந்திர மேற்படுகைகளின் காலவரிசை, நிலப்பரப்பு மற்றும் கனிமவியல் பண்பு களை நோக்கிய திட்டப் பணிகளுக்கு ஒத்துழைத்து செயலாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
    • சந்திர மாக்மாடி சத்திற்கான தாக்கங்கள் என்ற ஆய்விற்காக பெங்களூரு இஸ்ரோ ரூ.23 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

    சின்னாளபட்டி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.

    இந்தப் பணியின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பர ப்பில் விக்ரம் லேண்டரின் சீரான தரையிறக்கத்தைச் சோதிக்க குன்னமலையில் இருந்து 50 டன் சந்திர மண் ஊக்கிகளை அனுப்ப சந்திர மண் தயாரிப்பு ஆராய்ச்சித் திட்டத்தில் விஞ்ஞானிகள் குழு பணியாற்றியது.

    தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி மற்றும் ராமதேவம் கிரா மங்களிலிருந்து மண் மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழுவில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பயன்பா ட்டுப்புவி அமைப்பியல் துறையைச் சேர்ந்த புவியியலாளர் அறிவழகன் உறுப்பினராகச் செயல்ப ட்டார். இவரது பங்களி ப்பைக் காந்தி கிராமப் பல்கலைக்கழகம் பெருமை யாகப் பாராட்டியது.

    மேலும் இவர் மேற்கண்ட திட்டத்தின் தயாரிப்பு, மேற்பார்வை, தரக்கட்டு ப்பாடு, பேக்கிங் மற்றும் போக்குவரத்து ஆகிய வற்றிலும் பங்காற்றி யுள்ளார். சந்திரயான் 1 மற்றும் 2 தரவுகளை இஸ்ரோ வழங்கிய நிதியுதவி யுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திர மேற்படுகைகளின் காலவரிசை, நிலப்பரப்பு மற்றும் கனிமவியல் பண்பு களை நோக்கிய திட்டப் பணிகளுக்கு ஒத்துழைத்து செயலாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் தனது முதுகலை மற்றும் பி.எச்.டி. ஆராய்ச்சி ப் பணிகளுக்காகச் சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்திலும், அகமதாபாத் பிளானெக்ஸ், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்திலும் ஆராய்ச்சிக் கூட்டாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தப் பணிக்காக வழங்கப்பட்ட "ஹைலேண்ட் லூனார் மண் சிமுலண்ட் தயாரிப்பி ற்கான ஒரு முறை" குழுவி ற்கான காப்புரிமையின் ஒரு அங்கமாகவும் உள்ளார்.

    அஹமதாபாத் இஸ்ரோ வின் விண்வெளி பயன்பா ட்டு மையத்தால் அங்கீகரிக்க ப்பட்ட 2 முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களான "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் டேட்டாவுடன் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் தொலை புவி வேதியியல் மற்றும் கனிமவியல் பகுப்பாய்வு" மற்றும் "சந்திர ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் தரவைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரன் மேற் பகுதிகளின் லித்தாலாஜிக்கல் மற்றும் காலவரிசை பண்புகள்" ஆகியவற்றை 37 லட்சத்தி ற்குள் முடித்துள்ளார். தற்போது அவர் சந்திர யான்-2 தரவுகளைப் பய ன்படுத்தித் தேர்ந்தெடுக்க ப்பட்ட சந்திரன் மண்டல ங்களின் புதிய நுண்ணறிவுப் பரவல் பற்றிய ஆராய்ச்சித் திட்டத்தைச் செய்து வருகிறார். சந்திர மாக்மாடி சத்திற்கான தாக்கங்கள் என்ற ஆய்விற்காக பெங்களூரு இஸ்ரோ ரூ.23 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

    அறிவழகனை துணை வேந்தர் (கூடுதல் பொறுப்பு), பதிவாளர் (பொறுப்பு), ஆசிரியர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவர்கள் இந்தியாவின் நிலவாரா ய்ச்சிப் பணிகளுக்கு ஆற்றி வரும் பங்களிப்புகளுக்காக பாராட்டினர்.

    • கார் டிரைவர் கொலை வழக்கில் இது வரை 6 ே பர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியை தேடி சென்ற போது அவர் தப்பி ஓடி விட்டார்.
    • ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரான நடராஜனின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    மேலும் நடராஜன் நடத்தி வந்த நெய் கம்பெனியில் ரூ.6 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பிரச்சினையில் கடந்த மாதம் 17-ந் தேதி இரவு சுரேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடலை நெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுரேசின் தாய் மாமன் வடிவேல் உள்ளிட்டோர் சேர்ந்து அம்பிளிக்கையில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் அம்பிளிக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கொலை வழக்கில் தொடர்புடைய வடிவேல் (44) முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுரேஷ் உடலை எடுத்துச் சென்று மயானத்தில் எரித்த அம்பிளிக்கையைச் சேர்ந்த மனோகரன் (45), பாண்டி (37), தேனியைச் சேர்ந்த சிவஞானம் (58), நிலக்கோட்டையைச் சேர்ந்த சதீஸ்குமார் (29), திருப்பூரைச் சேர்ந்த முத்துக்குமார் (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் இது வரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நடராஜனை தேடி சென்ற போது அவர் தப்பி ஓடி விட்டார். தற்போது அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    ×