search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goat sales"

    • வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • அய்யலூர் வாரச்சந்தையில் போதிய அளவு இடம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையோரம் அதிகளவில் குவிகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தினசரி தக்காளி சந்தை மாலையில் நடைபெற்று வருகிறது. மேலும் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெற்று வருகிறது. அப்போது வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர்.

    வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நாட்டுகோழி, சேவல் மற்றும் ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அடுத்தவாரம் புரட்டாசிமாதம் தொடங்க உள்ளதால் பெரும்பாலோனார் விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் அசைவ உணவுகளை அவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யலூர் சந்தையில் வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்தனர்.

    இருந்தபோதும் விற்பனை ஓரளவு அதிகமாகவே நடைபெற்றது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் குளிரை தாங்கி வளரும் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரித்தது. 10 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.7500 முதல் ரூ.8000 வரை விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது.

    அய்யலூர் வாரச்சந்தையில் போதிய அளவு இடம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையோரம் அதிகளவில் குவிகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் குறித்த நேரத்திற்கு பேருந்தை இயக்க முடியாமல் டிரைவர்களும் அவதிஅடைகின்றனர். சந்தை உரிமையாளர்கள் வசூல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடுகளை ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள், பொதுமக்கள் வருகை அதிகளவு காணப்பட்டது.
    • 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், வாரம் தோறும் திங்கள் கிழமை காலை, ஆடு மற்றும் நாட்டுக்கோழி சந்தை கூடி வருகிறது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள்ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.வழக்கம் போல் நேற்று முன்தினம் கால்நடைச்சந்தை கூடியது.

    இஸ்லாமியர்களால் வரும் 10ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நெருங்குவதால்ஆட்டுச்சந்தைக்கு அதிகாலை, 5:30 மணி முதலே ஆடுகள் வரத்தும் வியாபாரிகள், பொது மக்கள் வரத்தும் காணப்பட்டது.வழக்கமாக உடுமலை சந்தைக்கு 700 ஆடுகள் வரத்து இருக்கும்.

    பக்ரீத் பண்டிகை காரணமாக, ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில் ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள், பொதுமக்கள் வருகையும் அதிகளவு காணப்பட்டது.அதிலும்செம்மறி ஆடுகள் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டதோடு, விற்பனையும் களைகட்டியது.ஆடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.குறைந்தபட்சம் குட்டிகள் 2 ஆயிரம் முதல் பெரிய அளவில் கொம்புகள் அழகாக உள்ள ஆடுகள் என 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது.அதே போல் கோழிச்சந்தைக்கு நாட்டுக்கோழிகள், சேவல், கட்டுச்சேவல் என 500க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    ரகத்திற்கு ஏற்ப 350 முதல் 5,700 ரூபாய் வரை விற்றன.வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை காரணமாக உடுமலை சந்தைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வரத்து காணப்பட்டன. வழக்கமான விலையை விட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்றன என்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் சந்தையில் ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடி வரை ஆட்டு வியாபாரம் நடந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரத்தில் ஆட்டுச்சந்தை இயங்கி வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த ஆட்டுச்சந்தைக்கு ஆடு வளர்ப்போரும், வியாபாரிகளும் ஆடுகளை விற்க, வாங்க கூடுவார்கள். கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இங்கு கொண்டு வரப்படுவதால், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ. 1 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகமாக நடக்கும். அப்போது ஏராளமானோர் ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வருவதுண்டு. இதனால் சுமார் ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை, அதற்கு மறுநாள் கரிநாளுக்காக ஆடுகள் விற்பனை அதிகமாக நடைபெறும். இதற்காக நேற்று எட்டயபுரம் சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    அதிகாலை 5 மணி முதலேயே வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர். பால்குடி மாறா குட்டி ஆடு ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. வளர்ந்த ஆடுகள் கிலோ ரூ. 500 என ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ஒரு நாள் மட்டும் ரூ. 6 கோடி வரை ஆட்டு வியாபாரம் நடந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில்பட்டியை சேர்ந்த வியாபாரிகருப்பசாமி கூறுகையில், வழக்கமாக ஆடுகளின் எடையை கணக்கிட்டு தான் கிலோவுக்கு இவ்வளவு என வாங்குவோம். இந்தாண்டு கிலோ ரூ.500 வரை வாங்குகிறோம். வழக்கத்தை விட அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன, என்றார்.

    ஆட்டு சந்தையையொட்டி வெட்டு அரிவாள், கிடா அறுக்கும் சூரி கத்தி, தொரட்டி கத்தி, பண்ண அரிவாள் விற்பனையும் நடந்தது. வெட்டு அரிவாள் ரூ.450, பண்ண அரிவாள், தொரட்டி ஆகியவை தலா ரூ.150, தகட்டு கத்தி ரூ.30, சூரி கத்தி ரூ.350 என விற்பனை செய்யப்படுவதாக தென்காசியை சேர்ந்த வியாபாரி கோபால் தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வி.மாயி கூறும்போது, சிலம்பாட்ட கம்பு ரூ.120 முதல் 140, வேலிக்கருவை வெட்டும் கம்பு ரூ.70 முதல் 150, ஆட்டுக்கு குழை அறுக்கும் கம்பு ரூ. 250 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்கிறேன். பொங்கல் பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நேற்று முன்தினமே இங்கு வந்துவிட்டோம். விற்பனையும் நன்றாக இருந்தது, என்றார்.

    ×