search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்ரீத் பண்டிகை - ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
    X

    கோப்புபடம்.

    பக்ரீத் பண்டிகை - ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

    • ஆடுகளை ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள், பொதுமக்கள் வருகை அதிகளவு காணப்பட்டது.
    • 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், வாரம் தோறும் திங்கள் கிழமை காலை, ஆடு மற்றும் நாட்டுக்கோழி சந்தை கூடி வருகிறது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள்ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.வழக்கம் போல் நேற்று முன்தினம் கால்நடைச்சந்தை கூடியது.

    இஸ்லாமியர்களால் வரும் 10ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நெருங்குவதால்ஆட்டுச்சந்தைக்கு அதிகாலை, 5:30 மணி முதலே ஆடுகள் வரத்தும் வியாபாரிகள், பொது மக்கள் வரத்தும் காணப்பட்டது.வழக்கமாக உடுமலை சந்தைக்கு 700 ஆடுகள் வரத்து இருக்கும்.

    பக்ரீத் பண்டிகை காரணமாக, ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில் ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள், பொதுமக்கள் வருகையும் அதிகளவு காணப்பட்டது.அதிலும்செம்மறி ஆடுகள் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டதோடு, விற்பனையும் களைகட்டியது.ஆடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.குறைந்தபட்சம் குட்டிகள் 2 ஆயிரம் முதல் பெரிய அளவில் கொம்புகள் அழகாக உள்ள ஆடுகள் என 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது.அதே போல் கோழிச்சந்தைக்கு நாட்டுக்கோழிகள், சேவல், கட்டுச்சேவல் என 500க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    ரகத்திற்கு ஏற்ப 350 முதல் 5,700 ரூபாய் வரை விற்றன.வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை காரணமாக உடுமலை சந்தைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வரத்து காணப்பட்டன. வழக்கமான விலையை விட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்றன என்றனர்.

    Next Story
    ×