search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூர் சந்தையில்  செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
    X

    அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள்.

    அய்யலூர் சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

    • வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • அய்யலூர் வாரச்சந்தையில் போதிய அளவு இடம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையோரம் அதிகளவில் குவிகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தினசரி தக்காளி சந்தை மாலையில் நடைபெற்று வருகிறது. மேலும் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெற்று வருகிறது. அப்போது வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர்.

    வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நாட்டுகோழி, சேவல் மற்றும் ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அடுத்தவாரம் புரட்டாசிமாதம் தொடங்க உள்ளதால் பெரும்பாலோனார் விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் அசைவ உணவுகளை அவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யலூர் சந்தையில் வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்தனர்.

    இருந்தபோதும் விற்பனை ஓரளவு அதிகமாகவே நடைபெற்றது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் குளிரை தாங்கி வளரும் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரித்தது. 10 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.7500 முதல் ரூ.8000 வரை விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது.

    அய்யலூர் வாரச்சந்தையில் போதிய அளவு இடம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையோரம் அதிகளவில் குவிகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் குறித்த நேரத்திற்கு பேருந்தை இயக்க முடியாமல் டிரைவர்களும் அவதிஅடைகின்றனர். சந்தை உரிமையாளர்கள் வசூல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×