என் மலர்
நீங்கள் தேடியது "Demonstration demanding restoration"
- கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 14 செண்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
- இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆத்தூர் வட்டம் போடிகாமன் வாடியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் ஊரில் பழமையான முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 14 செண்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.
இதேபோல் நாம்தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட வக்கீல் அணி சார்பில் மவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த மனுவில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை விஜயலெட்சுமி மற்றும் வீரலெட்சுமி ஆகியோர் பொய்யான குற்றசாட்டுகளை கூறி சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர்.
பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.






