நிலக்கோட்டை அருகே போலி பீடி விற்ற 2பேர் கைது

மலபார் பீடி கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். ஒரு சாக்கு மூட்டையில் அசல் மலபார் பீடியை போன்று போலியான மலபார் பீடி 20 பண்டல்கள் வைத்திருந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நிலக்கோட்டை:

மதுரை மாவட்டம் கோசி கடை பகுதியை சேர்ந்த வர் தங்கராசு (வயது 51). இவர் மலபார் பீடி கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டி சவுடம்மன்கோவில் பகுதியில் போலி மலபார் பீடி விற்கப்படுவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது அங்கு திண்டுக்கல், பேகம்பூரைச் சேர்ந்த காஜா முகைதீன் (வயது 54) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த காளிமுத்து (வயது 52) ஆகிய 2 பேரும் ஒரு சாக்கு மூட்டையில் அசல் மலபார் பீடியை போன்று போலியான மலபார் பீடி 20 பண்டல்கள் வைத்திருந்தனர்.

உடனே கையும் களவுமாக பிடித்து விளாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரனிடம் ஒப்படைத்து கொடுத்த புகாரின் படி 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com