என் மலர்
தர்மபுரி
- ஜி.கே. மணி தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தருமபுரி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. அதனால் அவர் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார் என பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு பா.ம.க கவுர தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென பா.ம.கவினர் மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீசார் பா.ம.க. எம்.எல்.ஏக்கள். ஜி.கே. மணி, வெங்கடேஸ்வரன் மற்றும் ஏராளமான பா.ம.க.வினரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இதில் 500-க்கு மேற்பட்டோர் கைது செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆப்பாட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை.
- பொதுமக்கள் எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொம்மிடி அருகே கோட்டமேடு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22-ந்தேதி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பொம்மிடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் முருகனிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
இதையடுத்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கோட்டைமேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் எந்நேரமும் கடைக்கு மதுபாட்டில்களை கொண்டு வரக்கூடும் என கருதி நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் அப்பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து ள்ளது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5500 கனஅடியாக குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயுள்ளனர்.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூடுபனி மற்றும் குளிர் நிலவி வருகிறது.
அதேபோல், பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு உள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயுள்ளனர்.
மேலும் தருமபுரி, அதியமான் கோட்டை, தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் அதிகாலை முதல் பனிப்பொழிவு, இருந்து வருகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.
தமிழ் மாதமான கார்த்திகை மாதம் தொடங்கி, மாசி மாதம் என 4 மாதங்கள் வரை பனிப்பொழிவு அதிக மாக காணப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கார்த்திகை மாதத்தில் இன்று அதிக அளவிலான பனிப்பொழிவு நிலவியது. தற்பொழுது மாவட்டத்தில் சீதோஷ்ன நிலையானது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள் போன்று உள்ளது. இந்த பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை அதிகளவு குளிர் இருக்கும். அந்த வகையில் தற்போது நவம்பர் மாத இறுதியில் ஓசூர் பகுதியில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
நேற்று அதிகாலை முதல் ஓசூர், சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.
இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை மெதுவாக ஓட்டிச்சென்றனர். பனிப்பொழிவு நேரங்களில் சாலை விபத்துக்கள் அதிக அளவும் நடை பெறும். அதனை தடுக்க பொதுமக்கள் சாலையோரம் நடந்தும், வாகனங்களிலும் மெதுவாக பயணித்தனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக, ஓசூர் பகுதியில் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள், பொதுமக்கள், தொழிற்சாலைகளுக்கு பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலதரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். காலை 9 மணி வரை இந்த நிலை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
- தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்யும் மழை தற்போது குறைந்துள்ளது.
- நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி செல்கின்றன.
ஒகேனக்கல்:
தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடியாக நீடித்து வருகிறது.
தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்யும் மழை தற்போது குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து நேற்று வினாடிக்கு 8500 கன அடியாக குறைந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு முற்றிலும் குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி செல்கின்றன.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்தது.
மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் பாறைகளுக்கு இடையே சென்று காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் கூடியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா மாநில அணைகளில் தண்ணீர் திறப்பு குறைவாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன்காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றிலும் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோன்று மீன் விற்பனை கடைகள், கடைவீதி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் கூடியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் காவிரி ஆற்றில நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கடந்த 2 தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
- ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
கர்நாடகா மாநில அணைகளில் தண்ணீர் திறப்பு குறைவாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன்காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 6500 கன அடியாக இருந்த நீர் வரத்து படிபடியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் காவிரி ஆற்றில நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
+2
- கோவில்களில் பக்தர்கள் அதிகாலையில் முதல் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க தொடங்கினர்.
- பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை களை கட்டியது.
தருமபுரி:
தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயப்பன் சாமிக்கு பக்தர்கள் இருமுடி கட்டி கார்த்திகை முதல் தேதி முதல் சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம்.
இதைத்தொடர்ந்து இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் ஏராளமான தருமபுரி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் கோவில்களில் நீண்ட வரிசையில் வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
தருமபுரியில் உள்ள சீனிவாசராவ் தெருவில் உள்ள ஐயப்ப கோவிலில் இன்று அதிகாலை பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதேபோன்று கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், சாலை விநாயகர் கோவில், சித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகாலையில் முதல் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து கொண்டு விரதம் இருக்க தொடங்கினர்.
இதன் காரணமாக தருமபுரியில் கடைவீதியில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் துளசி மாலை உள்ளிட்ட மாலை வகைகள், கருப்பு, நீல நிறங்களில் சட்டை, வேஷ்ட விற்பனையும் களை கட்டியது.
இதேபோன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி காவி மற்றும் கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
மண்டல விரதத்தை தொடங்குவதற்காக குருசாமியின் முன்னிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
இதேபோன்று இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிவார்கள். அதன்படி கிருஷ்ணகிரியில் ஐயப்பன் சுவாமி கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து, மாலையணிந்து விரதத்தை துவக்கினார். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலைக்கு மாலை அணிய கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
இதேபோன்று மாவட்டத்தில் ஓசூர், பர்கூர், சூளகிரி ஆகிய பகுதிகளிலும் ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
- தருமபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது.
- முதன்மைக் கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்.
தருமபுரி:
ஆசிரியர்களை தகாத வார்த்தையால் பேசும் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவை கண்டித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட தலைவர் ஆசிரியர் ஆறுமுகம் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வின்போது, ஆசிரியர்களை ஒருமையில் பேசுவது, ஆசிரியர்களின் பிறப்பை தவறாக பேசுவது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான அரசு வழங்கப்பட்டுள்ள தற்செயல் விடுப்புகளை கணக்கிட்டு அதிக தற்செயல் விடுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களை தனியாக அழைத்து ஒருமையில் திட்டி வருகிறார்.
பல்வேறு ஆசிரியர்களின் வேதனை தெரிவித்ததன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், முதன்மைக் கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் நள்ளிரவில் காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு பகுதியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
- ஐந்தருவி, சினிபால்ஸ், மெயினருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.
இதனை தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மீண்டும் மழை பெய்ததால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு பகுதியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் ஒகேனக்கல்லில் இன்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 6500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயினருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






