என் மலர்tooltip icon

    கடலூர்

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நெய்வேலி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நெய்வேலி நகர காங்கிரஸ், நெய்வேலி இந்திரா நகர் காங்கிரஸ், நெய்வேலி ஐ.என்.டி.யூ. இளைஞர் காங்கிரஸ், சேவாதள காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் தொழிலாளர்கள் கமிட்டி, காங்கிரஸ் இலக்கிய அணி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. , மாநில பொதுச்செயலாளர் இளஞ்செழியன், தேசிய காங்கிரஸ் தொழிலாளர்கள் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் குமார், நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் ரவிக்குமார்,நெய்வேலி நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன், செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர் ராமலிங்கம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முருகன், நெய்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜன்,நெய்வேலி இந்திராநகர் தலைவர் அற்புதராஜ், மாவட்ட செயலாளர் ஜோதி சிவம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


    கடலூர் அருகே தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் மேல் அழிஞ்சுபட்டு பகுதியை சேர்ந்தவர் பற்குணன் (வயது 44). இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தென்னம்பாக்கம் காலனி பகுதியில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனால் மோட்டார் சைக்கிள் சென்ற பற்குணன் செல்ல முடியாமல் இருந்ததால் அவர்களிடம் செல்வதற்கு வழி விட வேண்டும் என கேட்டபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த 4 பேரும் பற்குணனை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பற்குணன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பற்குணன் கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார், ஞானவேல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே பழையநல்லூர் சாலையந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கவிதா(17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்து வரும் வீரசெல்வம். கடந்த 6 மாதமாக கவிதாவிற்கு அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து கவிதாவின் தாய் ரேவதி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    கடலூர் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் அருகே கே.என்.பேட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பார்த்திபன். இவர் டிப்ளமோ படிப்பு முடித்து கடந்த ஒரு மாதமாக கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களாக பார்த்திபன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்‌. இதனால் முருகன் மகன் பார்த்திபனை கண்டித்துள்ளார்.

    இதனால் மனம் உடைந்த பார்த்திபன் தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து பார்த்திபனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பார்த்திபனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலியில் என்எல்சி தொழிலாளி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் இத்தாலியன் ரோடு, என்எல்சி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ரெங்கசாமி. இவர் என்எல்சி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அலமேலு (வயது 47). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று நேற்று வீட்டில் ரங்கசாமி இல்லாத நேரத்தில் மன உளைச்சலில் இருந்த அலமேலு வீட்டின் எதிரில் உள்ள கொட்டகைக்கு சென்று அங்கு இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த ரெங்கசாமி அதிர்ச்சி அடைந்து நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரும்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீ மிதித்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே கரும்பூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை விசேஷ பூஜைகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்றது. 

    இதன் முக்கிய திருவிழா வானதீமிதி திருவிழா இன்று (20ம்தேதி)மதியம் 12மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீ மிதித்தனர். இதனை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள், ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.
    தவறான சிகிச்சை மூலம் சிறுமி பலியான சம்பவம் குறித்து போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கடலூர்:

    கடலுார் மாவட்டம், வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். அவரது மகள் லட்சிதா. (வயது 5)இவருக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த 7-ந் தேதி, வேப்பூரில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, மருத்துவராக இருந்த சத்தியசீலன் சிகிச்சை அளித்தார்.

    ஆனால் சிறுமி லட்சிதா உயிரிழந்தார். இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தவறான சிகிச்சையால் தங்களது மகள் இறந்து விட்டதாக பெற்றோர் ஆதங்கப்பட்டனர்.

    இதுபற்றி மருத்துவ அதிகாரிகள், மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

    விசாரணையில், சத்தியசீலன் போலி மருத்துவர் என தெரியவந்தது.இதனை தொடர்ந்து கடலுார் மாவட்டம், நல்லுார் வட்டார மருத்துவ அதிகாரி தமிழரசன், அந்த மருந்தகத்திற்கு சென்றார். அதை அறிந்தசத்தியசீலன், தப்பி ஓடி விட்டார்.

    அப்போது சத்தியசீலன் வைத்திருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், திருச்சி மாவட்டம், காட்டுப்புதுார் முகவரியில் இருந்த ஜெயசீலன் என்பவரின் மகன் பெயரும் சத்தியசீலன் என்பதுதெரிந்தது.

    தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,மற்றும் எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவம் அவர் படித்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் பணி புரிகிறார்.இவரது, மருத்துவ சான்றிதழ்படிப்பு போலியாக பயன்படுத்தி 5 ஆண்டுகளாக,வேப்பூர்’ சத்தியசீலன் மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு தீவிரமாக இடம் பார்க்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் துப்புரவு ஊழியர்கள் மூலம் குப்பைகள் அந்தந்த பகுதியில் அகற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன.

    ஆனால் தற்போது கம்மியம்பேட்டை மற்றும் கடலூர் முதுநகர் பகுதியில் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருவதால் கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் கெடிலம் ஆறு கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு தீவிரமாக இடம் பார்க்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகே முட்புதர்கள் நிறைந்து காலியிடம் இருந்து வந்தன. இதனை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முட்புதர்கள் முழுவதும் அகற்றப்பட்டு சுத்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் மாநகராட்சி பகுதியில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு டிராக்டர் மூலமாக அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு சென்றன. அப்போது அதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து திடீரென்று வாகனத்தை சிறை பிடித்து வெளியில் விடாமல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது? இங்கு யாரும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம். இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மாநகராட்சி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றன.

    தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்குட்பட்ட, 51 பஞ்சாயத்துகளில் பணிபுரியும் 175 கிராம தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் கிராமப்புற ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, நடப்பு ஆண்டு வரையிலான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

    சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும், காலதாமதமின்றி மாதம் ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் 10 ஆயிரம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தங்களது கோரிக்கைகளை மனுவாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். மேலும் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக சென்னையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
    பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மருத்துமனை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காலை, மாலை என இரு வேளையிலும் 140-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பணிகளில் இருக்கும் தொழிலாளர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். மேலும் வேலை நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

    இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களிடம் திடீரென்று செல்போன் உள்ளதா? என்பதனை சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் செல்போன் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சில நபரிடம் இருந்து அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    அதிர்ச்சியடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அங்கிருந்து அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மருத்துமனை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இனி வருங்காலங்களில் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

    அப்போது ஒப்பந்த தொழிலாளர்கள் அதிகாரிகள் கூறியதை ஏற்றுக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
    திட்டக்குடி அருகே 11-ம் வகுப்பு மாணவியை கடத்தியது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே பட்டூர் சேர்ந்த தர்மலிங்கம் விவசாயி. இவரது மகள் அனுசுயா. இவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு உறங்கி உள்ளனர். மறுநாள் காலை பார்த்த போது உறங்கிகொண்டு இருந்த அனுசுயாவை காணவில்லை.

    காணமல் போன அனசுயாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அனுசுயாவை பட்டூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிரஞ்சீவி (25)என்பவர் கடத்தி சென்றதாக தெரிந்தது.

    இதுகுறித்து தர்மலிங்கம் தனது மகளை மீட்டு தருமாறு ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அனுசுயாவை கடத்தி சென்ற சிரஞ்சீவியை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு சட்டத்தின் கீழ் விடுதலை செய்ததை எதிர்த்து வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு சட்டத்தின் கீழ் விடுதலை செய்தது. இதனை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறவழி போராட்டம் நடந்தது.

    அதன்படி விருத்தாசலத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் வன்முறையை எதிர்ப்போம் கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வாசகம் கொண்ட பதாகையுடன் அறவழிபோராட்டம் செய்தனர். இப்போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    ×