என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமப்புற தூய்மைப் பணியாளர்கள் சப்-கலெக்டர் ஆபீசில் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற தூய்மைப் பணியாளர்கள் சப்-கலெக்டர் ஆபீசில் முற்றுகை
தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்குட்பட்ட, 51 பஞ்சாயத்துகளில் பணிபுரியும் 175 கிராம தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கிராமப்புற ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, நடப்பு ஆண்டு வரையிலான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும், காலதாமதமின்றி மாதம் ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் 10 ஆயிரம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்களது கோரிக்கைகளை மனுவாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். மேலும் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக சென்னையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story






