என் மலர்
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.
நேற்று மதியம் 1 மணியளவில் சாராய வியாபாரிகளான லால்பேட்டையை சேர்ந்த விஜி (வயது 39), கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (28) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது ரோந்து சென்ற காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பதிவு எண் இல்லாமல் இருந்தது. கிடுக்கிப்பிடி விசாரணையில், அரசு டாஸ்டாக் கடையில் கூடுதல் பணம் கொடுத்து பெட்டி பெட்டியாக மதுப்பாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். இதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு ஏற்படுத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்தது. பின்னர், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு அதிக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர்.
அவர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைபடுத்தி பரிசோதனை செய்தது. இதில் அவர்கள் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 416 பேராக உயர்ந்தது.தற்போது மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று கடலூரில் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 50 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தார். மேலும் அவர்களை வீட்டில் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொரோனா மையம் வார்டுகளில்சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் 58 பேரும், பெரும்பாக்கம் அரசு மையத்தில் 45 பேரும் உள்பட 108 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினர்.
அவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழங்கள், அரிசி, காய்கறிகள் கொடுத்து வழியனுப்பி வைத்தார். மேலும் அவர்களை வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 143 டாஸ்மாக் கடைகள் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் 10 கடைகள் அமையபெற்று உள்ளது.இந்த கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.
இதையொட்டி காலை முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் பகுதியில் ஏராளமான குடி பிரியர்கள் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் 100 பேராக பிரித்து ஆங்காங்கே இட வசதிகளை ஏற்படுத்தி சமூக இடைவெளியில் அமர வைத்தனர். மேலும் முகம் கவசம் அணிந்திருக்க வேண்டும் என போலீசார் கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.
காலை முதல் காத்துக்கொண்டிருந்த மது பிரியர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது போல் 500 டோக்கன்கள் மட்டும் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது. இதில் குடிப்பிரியர்கள் போட்டாபோட்டி ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களிடத்தில் நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது. இன்று கரு நீல வண்ண டோக்கன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை முதல் ஏராளமான குடிப்பிரியர்கள் திரண்டதால் உச்சநீதிமன்றம் அறிவித்தது போல் 500 டோக்கன்விறுவிறுப்பாக குடி பிரியர்கள் வாங்கி சென்றனர்.
மேலும் 500 டோக்கன் வழங்கிய தகவல் அறிந்த குடிபிரியர்கள் அருகாமையிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அவசர அவசரமாக சென்றதையும் காண முடிந்தது. இதுமட்டுமின்றி முதலில் 100 டோக்கன் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்ததாக 100, 100 டோக்கன் ஆக வைத்திருப்பவர்கள் பத்து பத்து நபர்களாக அனுப்பி வைத்து மது பாட்டில்கள் வாங்க போலீசார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
காலை நேரத்தில் தாமதமாக வந்த குடிப்பிரியர்கள் டோக்கன் கிடைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் அங்கேயே காத்துக் கிடந்தனர். அவர்களை போலீசார் காரணமின்றி நின்று கொண்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் நேரம் செல்ல செல்ல குடி பிரியர்கள் அதிகமாகும் காரணத்தினால் பலத்த போலீஸ் பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் போடப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தலைமையில் கடலூர் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கடலூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வரலாற்றில் முதல் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இன்று காலை பலர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்குவதற்கு காத்து இருந்ததை காண முடிந்தது.
குறிஞ்சிப்பாடி மண்டக மேட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31). இவர் அந்த பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக உள்ளார்.
சம்பவத்தன்று மின்மோட்டாரை இயக்க பாலமுருகன் சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் இறந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிக்கவில்லை. நேற்றுமாலை வெளியான சுகாதாரதுறை அறிவிப்பில் கடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதியானது. விருத்தாசலத்தை சேர்ந்த தந்தை -மகனுக்கும், மற்றொருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 36 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 214 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் வருகிற 18-ந்தேதி முதல் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க ஆயத்த பணிகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
அதாவது பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல், ஒரு பஸ்சில் 26 பேர் மட்டுமே செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இது பற்றி அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வருகிற 18-ந்தேதி அரசு பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடலூர் பணிமனையில் இருந்து பஸ் புறப்படும் போது, கிருமி நாசினி தெளிக்கப்படும். அதேபோல் பஸ் நிலையத்தில் சமூக இடைவெளி விட்டு பயணிகள் ஏறுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருக்கிறோம்.
அவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு செய்வார்கள். அதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலுக்கு பஸ்கள் சென்று பயணிகளை இறக்கி விட்டதும், நகராட்சி, பேரூராட்சி சார்பில் மீண்டும் பஸ்சில் கிருமி நாசினி தெளித்து, பயணிகளை ஏற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்குவோம். 26 பேர் மட்டும் செல்லும் வகையில் வரிசை எண்களை பஸ்சில் ஒட்டி வருகிறோம்.
மேலும் பஸ்களில் உள்ள சிறு, சிறு பழுதுகளையும் சரிசெய்து வருகிறோம் என்றார்.
நெய்வேலி அருகே உள்ள ஏ பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் கந்தன் மகன் அஜித் குமார்(வயது 22). இவரும் சி.ஆர்.குடியிருப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அஜித்குமாரையும், அந்த பெண்ணையும், சி.ஆர்.குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், அவர்களிடம் சென்று, ஏன் கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள், இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மாலையில் சி.ஆர். குடியிருப்பை சேர்ந்த இளைஞர்களுக்கும், மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் அஜித்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் என்.எல்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த மணிகண்டன் மகன் அன்புமணி(25), உத்திராபதி மகன் ஞானப்பிரகாசம்(30) மற்றும் சி.ஆர். குடியிருப்பை சேர்ந்த அன்பழகன் மகன் சதீஷ்குமார்(26), சந்திரசேகரன் மகன் முனீஸ்வரன் என்கிற சத்திய சந்திரன்(20), லிங்கேஷ் என்கிற கமலநாதன்(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.






