என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்.
    X
    மரணம்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலி

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது மதிக்கத்தக்க பெண் பலியானார்.
    கடலூர்:

    சிதம்பரம் அருகே உள்ள லால்பேட்டை முபாரக் தெருவை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க பெண் உடல்நலக் குறைவால் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    எனவே அவர் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்றார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×