search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெய்வேலி அருகே இருதரப்பினர் மோதல்- 5 பேர் கைது

    நெய்வேலி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் 5 பேர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள ஏ பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் கந்தன் மகன் அஜித் குமார்(வயது 22). இவரும் சி.ஆர்.குடியிருப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அஜித்குமாரையும், அந்த பெண்ணையும், சி.ஆர்.குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், அவர்களிடம் சென்று, ஏன் கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள், இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மாலையில் சி.ஆர். குடியிருப்பை சேர்ந்த இளைஞர்களுக்கும், மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் அஜித்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் என்.எல்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த மணிகண்டன் மகன் அன்புமணி(25), உத்திராபதி மகன் ஞானப்பிரகாசம்(30) மற்றும் சி.ஆர். குடியிருப்பை சேர்ந்த அன்பழகன் மகன் சதீஷ்குமார்(26), சந்திரசேகரன் மகன் முனீஸ்வரன் என்கிற சத்திய சந்திரன்(20), லிங்கேஷ் என்கிற கமலநாதன்(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×