என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாய்லர் வெடித்து தீப்பிடித்ததால் எழுந்த கரும்புகை
    X
    பாய்லர் வெடித்து தீப்பிடித்ததால் எழுந்த கரும்புகை

    நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 2-வது அனல் மின்நிலையத்தில் 6-வது உற்பத்தி பிரிவில் கடந்த 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்டனர்.

    இவர்களில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×